Friday, June 28, 2013

மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும்



மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
   மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும்

தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
   தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்

அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
    அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
     வேதனை மூட்டும் கேள்விசில

தடையது வந்தால் மாறுவதும்-பல
    தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
    நாளும் நடப்பது தோற்றத்தில்

ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
   எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
   உணர்ந்தால் வாரா ஒருதொல்லை

தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
   தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

                               புலவர் சா இராமாநுசம்

25 comments:

  1. /// ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
    உணர்ந்தால் வாரா ஒருதொல்லை ///

    சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
    அடிக்கடி மாறும் கோலத்தால்//உண்மைதான்யா நம்மை நாமே மாற்ற வேண்டும்

    ReplyDelete
  3. // கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
    கூறும் காரணம் பலவாகும் //

    என்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனை காரணங்கள்.

    ReplyDelete
  4. ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
    ஆண்டவன் படைப்பில் சொல்லாத
    சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
    சண்டை மூண்டிட இப்போது

    பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
    பரவக் காரணம் அதுயின்றே
    நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
    நிலையாய் எதனை நாம்கொண்டோம்

    சிறப்பான வரிகள் கண்டு மனம் நெகிழ்ந்தது
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்!

    எத்தனை உண்மையான வார்தைகள் ஐயா! அருமை!

    ஒவ்வொருத்தர் மனத்திலும் உள்ளதை அப்படியே பாவினால் படம்பிடித்துப் போட்டுவிட்டீர்கள்!

    அத்தனையையும் உள்ளத்துள் போட்டு அமுக்கி பெருமூச்சு மட்டுமே பதிலாய் வருகிறது...

    பணிவன்பான வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.7

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  7. முகநூலில் படித்தேன் ஐயா. மிக சிறப்பான கவிதை

    ReplyDelete
  8. தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
    தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
    இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
    எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!

    மாற்றம் ஒன்றே மாறாதது ..!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள் ஐயா..

    ReplyDelete
  9. மீள் பதிவு என்றாலும்
    என்றென்றும் மீளமுடியா பதிவிது.

    வணங்குகிறேன் புலவர் ஐயா.

    ReplyDelete
  10. தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
    தடுப்பின் போரே தொடுக்கின்றோம்

    உண்மை அய்யா. என்று மாறுமோ இந்நிலை

    ReplyDelete
  11. மிக்க நன்றி!

    ReplyDelete
  12. வரிகள் ஒவ்வொன்றும் அழகானது, ஆழமானது. கவிதை வரிகளையே தலைப்பிட்டது சிறப்பு. நன்றி அய்யா.

    ReplyDelete