மாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில்
மாறா எதுவும் இலையாகும்
கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
கூறும் காரணம் பலவாகும்
தோற்றம் என்று தோன்றியதோ-அன்றே
தொடர்ந்து மாற்றமும் தோன்றியதே
ஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
அடிக்கடி மாறும் கோலத்தால்
அடைமழை வறட்சி பனியென்றே-இந்த
அவனியில் காணும் நிலையின்றே
விடைதனை அறியா கேள்விபல-நெஞ்சில்
வேதனை மூட்டும் கேள்விசில
தடையது வந்தால் மாறுவதும்-பல
தத்துவ விளக்கம் கூறுவதும்
நடைஉடை கால மாற்றத்தில்-இங்கே
நாளும் நடப்பது தோற்றத்தில்
ஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
ஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
சண்டை மூண்டிட இப்போது
பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
நிலையாய் எதனை நாம்கொண்டோம்
எப்படி எதையும் ஆய்ந்தாலும்-பல
எண்ணங்கள் மனதில் சூழ்ந்தாலும்
ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
உணர்ந்தால் வாரா ஒருதொல்லை
தப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
தடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!
புலவர் சா இராமாநுசம்
அருமை.
ReplyDeleteமிக்க நன்றி!
Delete/// ஒப்பிட மாறா ஒன்றில்லை-என
ReplyDeleteஉணர்ந்தால் வாரா ஒருதொல்லை ///
சிறப்பான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்... நன்றி...
மிக்க நன்றி!
Deleteஆற்றல் என்பதும் காலத்தால்-நாளும்
ReplyDeleteஅடிக்கடி மாறும் கோலத்தால்//உண்மைதான்யா நம்மை நாமே மாற்ற வேண்டும்
மிக்க நன்றி!
Delete// கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால்
ReplyDeleteகூறும் காரணம் பலவாகும் //
என்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனை காரணங்கள்.
மிக்க நன்றி!
Deleteஆதியும் அந்தமும் இல்லாத-அந்த
ReplyDeleteஆண்டவன் படைப்பில் சொல்லாத
சாதியும் வந்தது எப்போது-நமக்குள்
சண்டை மூண்டிட இப்போது
பாதியில் புகுந்தது அதுவொன்றே-கலகம்
பரவக் காரணம் அதுயின்றே
நீதியும் மாறும் நிலைகண்டோம்-எனில்
நிலையாய் எதனை நாம்கொண்டோம்
சிறப்பான வரிகள் கண்டு மனம் நெகிழ்ந்தது
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
மிக்க நன்றி!
Deleteஐயா வணக்கம்!
ReplyDeleteஎத்தனை உண்மையான வார்தைகள் ஐயா! அருமை!
ஒவ்வொருத்தர் மனத்திலும் உள்ளதை அப்படியே பாவினால் படம்பிடித்துப் போட்டுவிட்டீர்கள்!
அத்தனையையும் உள்ளத்துள் போட்டு அமுக்கி பெருமூச்சு மட்டுமே பதிலாய் வருகிறது...
பணிவன்பான வாழ்த்துக்கள் ஐயா!
த ம.7
மிக்க நன்றி!
Deleteசிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமுகநூலில் படித்தேன் ஐயா. மிக சிறப்பான கவிதை
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
ReplyDeleteதடுப்பின் போரே தொடுக்கின்றோம்
இப்படி இருக்கும் இவ்வுலகில்-இனி
எல்லாம் மாற்றம் மாற்றம்தான்!
மாற்றம் ஒன்றே மாறாதது ..!
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள் ஐயா..
மீள் பதிவு என்றாலும்
ReplyDeleteஎன்றென்றும் மீளமுடியா பதிவிது.
வணங்குகிறேன் புலவர் ஐயா.
மிக்க நன்றி!
Deleteதப்படி வைத்தே நடக்கின்றோம்-பிறர்
ReplyDeleteதடுப்பின் போரே தொடுக்கின்றோம்
உண்மை அய்யா. என்று மாறுமோ இந்நிலை
மிக்க நன்றி!
ReplyDeleteகவிதை சிறப்பு...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை...
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் அழகானது, ஆழமானது. கவிதை வரிகளையே தலைப்பிட்டது சிறப்பு. நன்றி அய்யா.
ReplyDelete