வானத்தை
முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க
வழியில்லா மக்கள்தான் பரதேசி
யிங்கே!
ஏனென்று
கேட்காத ஊடகங்க ளிங்கே - ஏதும்
எல்லையின்றி நடக்கின்ற நாடகங்க
ளிங்கே!
தானின்று நடக்கின்ற நாடுமது மிங்கே- மக்கள்
தடம்மாறி போகின்ற நிலைதானே! இங்கே!
தேனல்ல கொட்டுவது தேளாகும்! இங்கே –நாளும்
திகைப்போடு கேட்கின்றார் அரசுதான்
எங்கே?
கால்கிலோ
காய்கூட வாங்கிடவே இயலா –ஏழைக்
கண்ணீரைத் துடைத்திட யாருமே முயலா!
நாள்முற்றும் உழைத்தாலும் அரைவயிறு காணா-சாகா
நடைப்பிணமே! அவன்வாழ்வு! கண்டுமதை
நாணா!
ஆள்வோரே! கண்மூடி துயிலொன்று கொண்டால்? –ஆள
ஆதரவு தந்தார்க்கு செய்கின்ற
தொண்டா?
மாள்வாரா
மீள்வாரா விரைந்துசெயல் படுவீர் –எனில்
மட்டற்ற துயராலே நீரும்தான் கெடுவீர்!
நஞ்சாக ஏறிவிட நாள்தோறும் அந்தோ –தெரு
நாய்போல அலைகின்றார் உள்ளமதும்
நொந்தே!
பிஞ்சாக உதிர்கின்ற காய்போல ஆனார் –தமக்குள்
பேசியே திரிகின்ற பித்தனாய்ப்
போனார்!
பஞ்சாக அடிபட்டும் பறந்துடு வாரோ –மீண்டும்
பாராளும் தேர்தலில் மறந்துடு வாரோ?
அஞ்சாது நடக்காதீர்! ஆள்வோரே ஈண்டும் –உடன்
ஆவனவும்
செய்தால்தான் வருவீராம் மீண்டும்!
புலவர் சா
இராமாநுசம்
ஆள்பவர்கள் விழித்துக் கொண்டே தூங்குவது போல் தான் உள்ளார்கள் ஐயா... /// உடன் ஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்...! /// நன்றாக சொன்னீர்கள்...!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஅழகிய கவிதை வரிகள் அய்யா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteநடுத்தர மக்களின் இழி நிலையை படம் பிடித்து காட்டிய வரிகள். ஐயா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteஆமாம் ஐயா... அருமையாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteஅவர்கள் உணருவதெப்போ
அவலங்கள் தீருமோ அப்போ!...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஇவங்களை எல்லாம் திருத்த முடியாதுங்க ஐயா!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteசெவிடன் காதில் ஊதிய சங்குதான்! இவர்கள் திருந்த மாட்டார்கள் ஐயா!
ReplyDeleteமக்கள் படும் துன்பத்தை எடுத்துக் கூறியுள்ளீர்கள். என்று தீருமோ ?
ReplyDeleteஅருமை ...அருமை ...
ReplyDeleteநடுத்தர மக்களின் நிலையினை அருமையாய் எழுத்தில்.. நன்றி அய்யா
ReplyDeleteஆமாம் ஐயா... அருமையாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteஇன்றைய நிலையை அழகாகச்
ReplyDeleteசொல்லி இருக்கிறீர்கள் புலவர் ஐயா.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதே கதி தான்
ReplyDeleteஅனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் இதனை
ReplyDeleteமிகுந்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்திய விதம்
அருமை ஐயா !! மிக்க நன்றி பகிர்வுக்கு .
எங்கள் உள்ளத்துணர்வை
ReplyDeleteஅப்படியே அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
உணர்வும் சொற்களும் கவிதை நதிக்கு
இருகரையாய் கைகோர்த்து நடப்பதை
தங்கள் கவிதைகளில் மட்டுமே காணமுடிகிறது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 10
ReplyDelete//அஞ்சாது நடக்காதீர்! ஆள்வோரே ஈண்டும் –உடன்
ReplyDeleteஆவனவும் செய்தால்தான் வருவீராம் மீண்டும்!//
இந்த வரிகளே போதும் இவர்களுக்கு .....
வணக்கம் ஐயா எப்படி உள்ளீர்கள் ?...நீண்ட நாள் ஆக்கத்தைக்
ReplyDeleteகாணவில்லை உழலும் மனதில் உங்கள் நினைவுகள் அடிக்கடி
வந்து போகின்றது .நலம் அறிய ஆவலாக உள்ளேன் .