ஆறிடும்
மேடு பள்ளம் –என
ஆகுமே அழியும் செல்வம்!
மாறிடும் நம்முடை வாழ்வில்-இதை
மறவாது நடப்பின் தாழ்வில்!
ஏறிடும் போதும் செம்மை –நம்
இயல்பென வாழின், நம்மை
கூறிடும்
உலகம் போற்றி –நல்
குணவானாய் நாளும் சாற்றி!
வருவாயோ ஏதும் இல்லை –என
வாழ்கின்ற போதும், தொல்லை,
தருமாறு சூழல் வரினும் –கலங்கி
தடுமாறும் நிலையே தரினும்!
ஒருநாளும் தன்னிலை தாழா –மிக்க
உறுதியே நெஞ்சில் வீழா
வருவாரே இங்கே இன்றும்-நிலைத்து
வாழ்வாராம் அறிவீர் என்றும்!
இம்மையில் வறுமை கொடிதே-அதுவும்
இளமையில் மிகவும் கொடிதே!
அம்மையாம் ஔவை கூற்றே-அதை
அனைவரும் மனதில் ஏற்றே!
நம்மையே திருத்திக் கொள்வோம்-வாழ்வை
நடத்திடின் என்றும் வெல்வோம்!
செம்மையுள் செம்மை ஆமே –வறுமை
சிந்தனை செய்வீர் தாமே!
புலவர் சா இராமாநுசம்
வறுமையில் செம்மையாக வாழ உங்களின் கவிதை ஒளிவிளக்கால் வழிகாட்டியமை வெகு அழகு! மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபாடம்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅனைத்து பிரச்சனைக்கும் தீர்வு உழைப்பு...
ReplyDeleteநல்லதொரு கவிதை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஆமாம் ஐயா... வறுமை கொடியதுதான். ஆனால் அதற்கு இளமை முதுமை வேறுபாடில்லையே...
ReplyDeleteஎந்தத் தருணத்திலும் அதன் கொடுமை கொடுமையானதுதான்.
அருமையான சிந்தனை. அழகாகச் சொன்னீர்கள். நல்ல கவிதை.
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
த ம. 5
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநம்மையே திருத்திக் கொள்வோம்-
ReplyDelete>> நாம திருந்திட்டாலே நாடே திருந்திடும். தனி மனித ஒழுக்கம் அவசியமானது ஐயா!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteகொடிது கொடிது இளமையில் வறுமை ....
ReplyDeleteஔவையின் வரிகளை நினைவுபடுத்தி. அதனின்றும் திருந்தி வாழ வழி சொன்னீர்கள் நன்றி ஐயா.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஉழைப்போம் உயர்வோம்
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசெம்மையுள் செம்மை ஆமே –வறுமை
ReplyDeleteசிந்தனை செய்வீர் தாமே!// அருமை ..!
அருமையான பாடம்!
ReplyDeleteநல்ல சிந்தனை சொன்னீர்கள்.
ReplyDeleteவறுமையில் செம்மை..... சிறப்பான வரிகள்...... பகிர்வுகள் தொடரட்டும் புலவர் ஐயா.
ReplyDelete
ReplyDeleteஐயா வணக்கம். மூத்த பதிவர்கள் எனும் பதிவு எழுதி இருக்கிறேன். வருகை தந்து கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி மின் அஞ்சல் முகவரி கிடைக்காததால் இதில் எழுதினேன்.
இரண்டாவது பந்தியில் வந்த முழு வரிகளும் தன்னம்பிக்கை ஊட்டும் அப்பழுக்கற்ற வரிகள் ஐயா
ReplyDeleteஅன்புச் சகோதரன்
என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக