Wednesday, May 22, 2013

உணர்வை அணுவேனும் கொண்டாயா?

கரைந்தே உண்டிடும்
காக்கையைப் போலவே
விரைந்து ஏதேனும் செய்தாயா-அந்த
விவேகம் தனையேனும் எய்தாயா?

தன்னினம் காத்திட
தன்குரல் எழுப்புமே
உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
உணர்வை அணுவேனும் எய்தாயா?

கூட்டுள குஞ்சுக்கும்
கொத்திடும் அலகாலே
ஊட்டிடும் அன்பினைக் கற்றாயா-பறவை
உணர்வை அணுவேனும் பெற்றாயா?

கன்றதைக் காணாது
கத்திடும் தாய்பசு
ஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

வளர்த்திடும் நாய்கூட
வாலாட்டி நன்றியாம்
உளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

தட்டினால் மாடுகள்
தானாகப் பாதையில்
ஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த
உணர்வை அணுவேனும் கொண்டாயா?

           புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. உணர்வை அணுவேனும் கொண்டாயா?// உங்கள் கேள்வியில் நியாம் உள்ளது .ஆனால் எத்தனைபேர் சொல்வார்கள்

    ReplyDelete
  2. உணர வேண்டிய வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சமுக நோக்கு பாதையில் சிறந்த கவிதைகள் ஐயா படித்தேன் எனக்குள்ளும் சில சிந்தனைகள் உதிக்கிறது கவிதையாக ....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. மாடுகளை விட கேவலமான நிலைக்கு சென்றுவிட்டான் மனிதன் தற்போது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. உணர்வு உண்டோ உனக்கெனக்கேட்டே
    இனம்வாழ உளந்திருந்த உரைத்திட்டகவியால்
    திணறும் மனதை தெளிவுறசொன்னீர்
    கனமிகும் கவியே கைகூப்புகின்றேன்...

    அருமையான சிந்தனைக்கவி ஐயா!
    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    த ம. 4

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. ஐந்தறிவு ஜீவராசிகளிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன என்பதை உணர்த்தும் வரிகள் சிறப்புங்க ஐயா.

    ReplyDelete
  7. அந்த உணர்வெல்லாம் இருந்தால்தான் உலகம் நல்லாருக்குமே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. அருமையாகச் சொன்னீர்கள்
    நம்மை அண்டி வாழ்பவைகளிடம்
    நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
    மனம் சுட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. இனியேனும் கற்றுக் கொள்வார்கள் என்பதும் கேள்விக் குறிதான் ஐயா .
    சிறப்பான வரிகள் மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. தன்னினம் காத்திட
    தன்குரல் எழுப்புமே
    உன்னினம் காத்திடச் செய்தாயா-பறவை
    உணர்வை அணுவேனும் எய்தாயா?//தமிழினத்துக்கு அழகுத் தமிழில் அறைக்கூவல் விடுத்திருக்கிறீர்கள்.
    ரசித்தேன்

    ReplyDelete
  12. ஆறறிவு ஆறறிவு என்று நமக்கு நாமே அறிவித்துக் கொண்டு, ஐந்தறிவினும் கீழாய் வாழ்கிறோம் அய்யா. நன்றி

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...