பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வீரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வீரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லி விளக்க தோதாக -தினமும்
செய்திகள் வருதே தீதாக
தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர் தெழிலாளி !
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட !
கனிவாய்ச் சொல்லியே, இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே !
பிணியாய் ஆனதே இந்நாளில்=இந்தப்
பிழையும் மறைவது எந்நாளில் ?
ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே !
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதோ தனியார் பள்ளிகளே !
கோழைகள் நடுத்தரக் குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை !
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதார் !
எனவே ,
வாழும்வழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே
புலவர் சா இராமாநுசம்
பணமே குறிக்கோளாக கொண்டுள்ள தனியார் பள்ளிகள் உணர வேண்டிய கருத்துக்கள் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteபிணியாய் ஆனதே இந்நாளில்=இந்தப்
ReplyDeleteபிழையும் மறைவது எந்நாளில் ?//
பணமே வாங்கா பண்பாளர்
மனமே உருகி துவங்கினால்
தினமே வருமே புண்ணியங்கள்
துயரும் நீங்கிடும் ஏழைகளுக்கு
நன்றி!
Deleteஅருமையான தகவலைத் தந்தீர்கள் தனியார் பள்ளிகள் வருமான
ReplyDeleteநோக்குடன் பெருகியவண்ணமே தான் உள்ளது ஏழைகளின் கல்வி
வளர்ச்சிக்குத் தடையாக இந்நிலை மாறத்தான் வேண்டும் .மிக்க நன்றி
ஐயா பகிர்வுக்கு .இன்று நான் வடித்த பாடலுக்கு தங்களின் இனிய நற்
கருத்தினையும் எதிர்பார்கின்றேன் .
நன்றி!
Deleteநன்றே சொன்னீர்கள். உண்மைதான் ஐயா. கல்விக்கும் ஏழை பணக்காரனென பாகுபாடோ... கொடுமைதான். ஏழை மாணவச் செல்வங்களுக்கு மூளை குறைவோ? உரியவர்கள் செவிகளில் உறைக்கச்சொல்லவேண்டும்.
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
த ம. 4
நன்றி!
Deleteஉண்மை தான் ஐயா நடுத்தரகுடும்பங்கள் தான் இதில் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். துயர் நீங்கிட வழி உண்டோ ?
ReplyDeleteநன்றி!
Deleteநயமாகக் கேட்டீர்கள் புலவரே நன்று.
ReplyDeleteநன்றி!
Deleteஅருமையான தகவல், நியாயமான கருத்து புலவரே.
ReplyDeleteநன்றி!
Deleteவீழும் கல்வி வளர்சிதான்-
ReplyDeleteஅவலம் மாறுவது எப்போது ..!
நன்றி!
Deleteபல பள்ளிகள்/கல்லூரிகள் இப்படி பணம் சம்பாதிக்க வழியாக மாறிவருவது மனதில் வருத்தம் விளையச் செய்கிறது.....
ReplyDeleteஅதிலும் எல்.கே.ஜி சேர்க்கும்போது படும் கஷ்டம் அப்பப்பா சொல்லி மாளாது.....
நன்றி!
Deleteஅதிலும் எல்.கே.ஜி சேர்க்கும்போது படும் கஷ்டம் அப்பப்பா சொல்லி மாளாது..... -- வெங்கட் நாகராஜ்.
ReplyDeleteநம்ம நாடு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதிலும்
இவ்வளவு கேவலமாகவா ஆகிவிட்டது...? வருந்துகிறேன்.
அருமையான கவிதை புலவர் ஐயா.
இது போன்ற பள்ளிகளின் பகட்டில் மயங்கும் மக்கள் உள்ளவரை அவர்களுக்கு கொண்டாட்டம்தான். இலவசமாக கிடைப்பது தரமற்றது என்னுவதே காரணம். நன்கு படித்த பின்னணயில் உள்ள குழந்தைகளை மட்டும் சேர்த்துக்கொண்டு தரமான கல்வி தருகிறோம் என்று பீற்றிக் கொள்வார்கள்.
ReplyDeleteநல்ல சாட்டையடிக் கவிதை அய்யா!
நன்றி!
Deleteநன்றாக கேட்டீர்கள்.
ReplyDeleteகோழைகள் நடுத்தரக் குடும்பங்கள-படும்
ReplyDeleteகொடுமைகள் தமக்கோர் அளவில்லை //உண்மைதான் அய்யா