காலம் ஓடும் நிற்காதே-வீண்
காலம் கடத்தல் ஆகாதே!
ஞாலம் சுற்றும்! யாராலே-தினம்
நடப்பது இயற்கைப் பேராலே
ஆலம் கூட மருந்தாகும்-தூய
அன்பே ஏழைக்கு விருந்தாகும்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
கொள்கை அழகு! பேசலுக்கு
திட்டம் இட்டே வாழ்வீரே-உரிய
தேவைக்குச் செலவும் செய்வீரே
பட்டம் பதவி எனத்தேடி-மனிதப்
பண்பை மறந்துப் பணம்நாடி
கொட்டம் போட வேண்டாமே-வெற்றிக்
கொடிகட்டிப் பறக்க ஈண்டாமே!
எட்டிக் கசத்தல் இயல்பன்றோ-இதை
எண்ணா செயல்தரும் துயரன்றோ
மற்றவர் தம்மின் குறைகண்டே-அவர்
மனமும்நோக அதை விண்டே
செற்றம் கொண்டிடச் செய்யாதீர்-தீயச்
சொற்களை அம்பென எய்யாதீர்
குற்றம் செய்யார் யாருண்டே-நம்
குறைகளை ஆயின் நிலைகொண்டே
சுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
சிந்தனை தன்னில் ஆழ்வோமே
வையம் தன்னில் வாழ்வாங்கு-நாம்
வாழ என்றும் புகழோங்கும்
செய்யும் செயலைத் தெளிவாக-நாம்
சீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
புலவர் சா இராமாநுசம்
கோலம் அழகு! வாசலுக்கு-நல்லக்
ReplyDeleteகொள்கை அழகு! பேசலுக்கு//உண்மைதான் அய்யா
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசுற்றம் சூழ வாழ்வோமே!-சுய
ReplyDeleteசிந்தனை தன்னில் ஆழ்வோமே
சுற்றம் சூழ வாழாததும், ஒன்று பட்டு நிற்காததும்தானே அய்யா, நமது இந்நிலைக்குக் காரணம். சரியாகச் செர்ன்னீர்கள் அய்யா. இனியாவத சுய சிந்தனை செய்யத் தொடங்கட்டும் நம் இனம்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஒவ்வொரு வரியும் சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteவரிக்கு வரி வாழ்க்கைக்கு வேண்டிய வழிமுறைகள், அருமை ஐயா.
ReplyDeleteபாலும் தெளிதேனும் கலப்பதைப்போல்
ReplyDeleteஅனுபவமும் புலமையும் கலக்கப் பிறந்த
கவிதை அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deletetha.ma 5
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாழும் வகை யாதெனவே
ReplyDeleteவளமாய் தந்தீர் பாக்களினால்
பாழும் புத்தியில் பதித்திட்டாலால்
மேலும் சிறப்பாய் இருந்திடலாம்
வீழும் எழும்பும் நாளதைபோல்
சூழும் துன்பமும் எனநினைத்தால்
நாளும் நலிவு ஏனய்யா
ஆழப்பதிய அறிவு சொன்னீர்.
அழகான கவியால் அருமையான செய்தி தந்தீர்கள் ஐயா.
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
த ம. 6
தங்கள் வரவுக்கும் பாடல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஉண்மை, உழைப்பு எருவாகும்!
ReplyDeleteபொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது!
அருமையாகச் சொன்னீர்கள் புலவரே.
உழைப்பை மனிதன் ஏமாற்றலாம்
உழைப்பு மனிதனை எப்போதும் ஏமாற்றுதில்லை.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅனைத்து வரிகளும் சிறப்பு.
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது புலவர் ஐயா.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசெய்யும் செயலைத் தெளிவாக-நாம்
ReplyDeleteசீர்பட செய்யின் களிவாக
உய்யும் வழியே உருவாகும்-அதற்கு
உண்மை, உழைப்பு எருவாகும்!
பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
பூமியில் புகழச் சொல்லேது! // அருமையான வரிகள்! சீரிய கவிதை! பகிர்வுக்கு நன்றி ஐயா!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Delete// பொய்யும் புரட்டும் இல்லாது –வாழின்
ReplyDeleteபூமியில் புகழச் சொல்லேது!//
உன்மையான வரிகள் ஐயா
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஉண்மையாய் வாழ்வது கடினம் எனினும் உண்மையான
ReplyDeleteவாழ்வே வாழ்வாகும் என தெள்ளத் தெளிவாக எடுத்துரைத் விதம்
அருமை ஐயா ! மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Delete\\ஆலம் கூட மருந்தாகும்-தூய
ReplyDeleteஅன்பே ஏழைக்கு விருந்தாகும்\\
அருமையாகச் சொன்னீர்கள். வரிக்கு வரி மனிதவாழ்வின் மேம்பாட்டுக்கும் மனவளத்துக்குமான அறவுரைகள்... அறிவுரைகள்.. அனைத்துக்குமாய் மனங்கனிந்த பாராட்டுகள் ஐயா.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
ReplyDelete