தாங்கிட
இயலா கொடுமையிதே –காற்றும்
தகித்திட முடியா அனலேயிதே!
தூங்கிட ஏதும் வழியில்லை-இரவும்
தொடர்ந்து வேர்வை தரும்தொல்லை!
ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
உறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
நிம்மதி அதுவரை நமக்கிலையே!
வீதியில் நடப்பவர் பரிதாபம் –படும்
வேதனைத் தருமே கடுங்கோபம்!
பீதியால் நிழலைத் தேடுகின்றார் –காணின்
பிழைத்திட அங்கே ஓடுகின்றார்!
காதில் புகுவதும் வெங்காற்றே-உச்சிக்
கதிரவன வெம்மையால் உடன்மாற்றே!
நீதியில்
செயலிதாம் மாற்றிடவாய்
நிம்மதி பெற்றிட ஆற்றிடுவாய்!
ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
அள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
பூண்டும்
கருகிப் போனதுவே –எரியும்
புகையில் நெருப்பென ஆனதுவே!
வேண்டுவன் தினமும் கதிரோனே-இவ்
வேதனை தாங்காயிம் முதியோனே!
புலவர் சா
இராமாநுசம்
கடுங்கோபத்தை வரிகளில் உணர முடிகிறது ஐயா...
ReplyDeleteகோடையின் கொடுமையைக் கொட்டித் தீர்த்த வரிகள். வெம்மையால் தகிக்கும் தேகத்தின் குமுறலை மீறி ரசிக்கவைக்கிறது தமிழினிமை. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவளைகுடா நாடுகள் போலவே தமிழகமும் வெயிலில் தகிக்கிறது இல்லையா அய்யா...!
ReplyDeleteசூரியன் மீதே கோவமா.... நீங்கள் அதிமுக-வா.....
ReplyDeleteஎப்படி கண்டுபிச்சோம் பாத்திங்களா
மிக்க நன்றி!
Deleteஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
ReplyDeleteஅள்ளித் தந்தால் எவ்வாறே!?
ஈண்டே நாங்கள் வாழ்ந்திடவா –இல்லை
இன்னல் பட்டே மாயந்திடவா!
கடுங்கோடையின் சுடும் வெப்பத்தை விவரிக்கும் பகிர்வுகள்..
மிக்க நன்றி!
Delete// ஓங்கிட நாளும் என்செய்வோம் –எப்படி
ReplyDeleteஉறக்க மின்றியே நாமுய்வோம்!
நீங்கிட வேண்டும் இந்நிலையே –உடன்
நிம்மதி அதுவரை நமக்கிலையே! //
என்று தணியும் இந்த வெயிலின் வேகம் என்று மனம் வெதும்புகிறது.
கோடையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது அய்யா. வரும் ஆண்டுகளின் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.புவி வெப்பமயமாதல்.
ReplyDeleteஒவ்வொரு காலநிலை மாற்றமும்
ReplyDeleteநம்மை சில சமயங்களில் வெறுப்படையச் செய்யும்..
ஆனால் வெயில் மட்டும் எப்போதும்...
==
அருமையான கவிதை பெருந்தகையே...
ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறே –அனலை
ReplyDeleteஅள்ளித் தந்தால் எவ்வாறே!?உண்மைதான் அய்யா
வெய்யில் கொடுமை என்றாலும் கவிதை இனிமை
ReplyDelete