இதயம் கனிந்த நல்லோரே—என்
இதயத்தில் வாழும் பல்லோரே!
நிதமும் எழுத நினைக்கின்றேன்-முதுமை
இயலா நிலையால் தவிக்கின்றேன்
இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!
சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை தவழட்டும்!-மக்கள்
நிம்மதி யாக வாழட்டும்!
பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
கேவல மான இதனாலே!
உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
ஏதும் அறியாக் கோழைகளே!
ஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!
புலவர் சா இராமாநுசம்
ஊரில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களின் இதய வலையில் இருந்து நீங்கள் எங்கும் அகலமுடியாது. சென்று வாருங்கள் காத்திருக்கிறோம்
ReplyDelete௵
Deleteமிக்க நன்றி!
Deleteஅருமையான கவிதை! லீவ்லெட்டரை கவிதையாகக் கொடுங்க உங்களாலதான் முடியும் ஐயா! உங்க பயணம் இனிமையொ சிறப்பா அமைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
ஒரு வாரம் இனிய பயணம் முடிந்து, மீண்டும் சிறப்பிக்க வேண்டும் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஊரில் இல்லை வரும்வாரம்-எனவே
ReplyDeleteஉம்வலை காண யிலைநேரம்!....
// சென்று வாருங்கள் காத்திருக்கிறோம்
மிக்க நன்றி!
Deleteவெற்றிகரமாக சென்று வாருங்கள்...
ReplyDeleteபதிவுகள் உங்களுக்காக காத்திருக்கும்
பால கணேஷ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் ஐயா. எவ்வளவு அழகா கவிதை மூலமே விடுப்புக்கடிதம் கொடுத்திருக்கீங்க! சமுதாய சிந்தையோடான கவிதை மனம் தொட்டது.விடுமுறையை இனிதே கழிக்க வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇயலும்போது எழுதுங்கள்.எழுத்தில் தொடர்பின்றிப் போனாலும்,மனத்தில் தொடர்பின்றிப் போகாது!பல்லாண்டு நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஓய்வெடுத்து உற்சாகமாக வாருங்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகாத்திருக்கின்றோம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகவிதையும் கருத்தும் அருமை.
ReplyDeleteகடைசியில் என்ன அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...!
வியந்து வணங்குகிறேன் புலவர் ஐயா.
த.ம. 6
மிக்க நன்றி!
Deleteசாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
ReplyDeleteசமத்துவம் எதிலும் நிலவட்டும்!//
எல்லோரும் மகிழ்வாய் இருக்கட்டும்
ஐயா...
ReplyDeleteஉங்கள் உடல்நலனும் மனநலனும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டுகிறேன். அருமையான கவியில் அழகாகச் சொன்னீர்கள்.
நீங்கள் வரும்வரை அருமையான நல்ல கவிதைகள் இங்கு எமக்குக் கிடைக்காமல் போகப்போகிறது. அதுதான் வருத்தம். ஆனாலும் உங்கள் ஓய்வும் முக்கியம். அதனைக்கவனியுங்கள். காத்திருக்கிறோம்.
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
த ம. 7
மிக்க நன்றி!
Deleteபயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அய்யா. சென்று வாருங்கள். காத்திருப்போம்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபெரியீர் பெரியீர் தான்...
ReplyDeleteஅருமையான ஆக்கமும்..'
ஆக்கத்தினூடே விடுப்பு செய்தியும்...
உங்களின் சிறப்பு கருத்திற்காக
எங்களின் வலை எப்போதும் காத்திருக்கும் பெருந்தகையே...
பயணம் இனிமையாக அமையட்டும்.