Friday, May 31, 2013

முகநூலில் வந்த பதிவுகள்-2

1


ஆலமரத்தினுடைய விதையானது மிகமிகச் சிறியது. ஆனால் அது முளைத்து மரமாகி விரிந்து கிளைகளும் விழுதுகளுமாக பரந்து பலபேர் அதன் கீழ், தங்கி, இளைப்பாற இடமாகிறது. ஆனால் பனை மரத்தின் விதையோ மிகவும் பெரியது என்றாலும் அது முளைத்து மரமானால் அதன் , கீழ் எத்தனைப் பேர் தங்கி இளைப்பாற முடியும்?

எனவே நம்மில் , சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடுகளை எண்ணாமல் அவர்களின் செயலால் ஏற்படும் பயன்களைக் கருதியே முடிவு செய்தல் வேண்டும்
2
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே!

பொய் பேசும் ஒருவன் தான் சொல்லும் திறமையால் அவன் சொல்லும் பொய், உண்மைபோலவே தோன்றும்

மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்
பொய்போ லும்மே பொய்போ லும்மே!

உண்மை பேசும் ஒருவன் பேசும் திறம் இல்லாமையால் அவன் கூறும் உண்மையும் பொய்போலத் தோன்றும்
3
ஒரு நாளைக்கு உண்பது ஒரு நாழி அரிசி சோறாகும்! உடுத்திக் கொள்வது நான்கு முழத் துணியாகும்! ஆயினும் நாம் மனதில் சிந்தித்து எண்ணுவது எண்பது கோடியாகும். இதை அறியாது அறிவுக் கண் மூடி வாழ்கின்ற குடிமக்களின் வாழ்க்கையானது எப்பொழுது வேண்டுமானலும் உடைந்து போகக்கூடிய மண்ணால் ஆன
பாத்திரத்துக்கு ஒப்பாகி சாகும்வரை துன்பம் தரும்!

                      புலவர்  சா  இராமாநுசம்

22 comments:

  1. மறக்காமல் முக நூல் பதிவினை
    பதிவினிலும் பகிர்ந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தாய் வீட்டிற்கு (ம்) தொடர்ந்து வரவேண்டுமாய்
    அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. இங்கும் ரசித்தேன் ஐயா...

    ரமணி ஐயா சொன்னது போல் முகநூல் மூழ்கடித்து விடும் என்பதும் உண்மை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. கருத்துள்ள பகிர்வுகள் நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. முகநூலையும் விட்டுவைக்காமல் தங்கள் பதிவுகளை அறங்கேற்றும் தங்களில் முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்...

    அழகிய கவிதை வரிகள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. ஐயா... மிகமிக அருமை!.

    உங்கள் ஆக்கங்கள் எமக்குத்தருதே ஊக்கங்கள்!
    தொடர்ந்து தாருங்கள் ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!...

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  6. முகநூல் பதிவுகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. உண்மை பேசும் ஒருவன் பேசும் திறம் இல்லாமையால் அவன் கூறும் உண்மையும் பொய்போலத் தோன்றும்//

    உண்மைதான் அய்யா....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  8. சிறப்பான எண்ணங்கள்.

    முகநூலில் அதிகம் சென்றுவிடாது இங்கேயும் எழுதுங்க புலவர் ஐயா......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  9. முக நூல் பதிவுகள்அருமை அய்யா.
    திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் கோரிக்கையே
    எனது கோரிக்கையுமாகும்

    ReplyDelete
  10. அருமையான சிந்தனையும் ஆக்கமும். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete