Monday, April 8, 2013

வெண்பா- நான்கும் இயற்கைப் பாங்கும்!




தென்றல்  வரவேற்க தீந்தமிழோ தாலாட்ட
அன்றங்கே பூத்தப்பூ ஆடிடவும் –நின்றமரம்
நீண்ட கிளையாலே நீங்கா நிழல்தருமே
தூண்ட உணர்வன்றோ தான்

சோலைக் குயிலங்கே சொக்கும் குரல்காட்ட
வாலைக்  குமரியென  வாவியிலே –மாலைமதி
தன்முகத்தைக் காட்டி தவழ்கின்ற மேகத்துள்
நன்றே மறைப்பதா நன்று


தேன்தேடி  வண்டொன்று தேன்மலரை நாடிவர
தான்தேடி சேர்த்தனை தந்திடுமே – வான்வரையில்
வீசும் மணம்போல வேந்தனவன  மார்பினிலே
பூசுகின்ற சந்தனமாய்  சொல்




இயற்கை எழில்சூழந்த ஏற்றமிகு காட்சி
செயற்கை அளித்திடுமா செப்பு –வியப்புமிகு
எண்ணற்ற பல்வசதி இன்றிங்கே வந்தாலும்
பண்ணற்ற பாவலவோ பார்

              புலவர்  சா  இராமாநுசம்

17 comments:

  1. படித்து ரசித்தேன் பூரித்தேன்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  2. இயற்கை எழில்சூழந்த ஏற்றமிகு காட்சி
    செயற்கை அளித்திடுமா செப்பு –வியப்புமிகு
    எண்ணற்ற பல்வசதி இன்றிங்கே வந்தாலும்
    பண்ணற்ற பாவலவோ பார்.

    மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்குப் பின் எழுதியுள்ள தங்களின் ‘வெண்பா’ வை வெண்பாவால் பாராட்டலாம் என்றால் இலக்கணத்தை மீறிடுவோனோ என்ற பயம். வெண்பாக்களை இரசித்தேன். நன்று!

    ReplyDelete
  4. ஐயா வணக்கம்!

    அழகிய அருமையான வெண்பா. மனதை அப்படியே ஈர்க்கின்றது.
    திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன். பலாச்சுளையை மொய்த்த ஈயாக மனம் லயித்துப்போயிற்று.

    ஓரிடத்தில் கருத்துப் புரியவில்லை ஐயா...

    //பண்ணற்ற பாவலவோ பார்//
    இங்கே பாவலவோ என்றிருக்குமிடத்தில் சரியான அர்த்தம் என்ன... கூறினால் தெரிந்துகொள்வேன். மிக்க நன்றி ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  5. மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமை ! மனம் கவர்ந்த வரிகள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  7. வெண்பாக்களின் வழி நானும் இயற்கையை ரசித்தேன். உங்களின் தமிழ் என்றும் இளமையானது ஐயா. அருமை!

    ReplyDelete
  8. அருமை ! மனம் கவர்ந்த வரிகள் ஐயா

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா.

    இயற்கையைப் பாடி இயற்றிய வெண்பா
    செயற்கை செயலையும் செப்ப - வியந்தேன்!
    தயக்கமுடன் கேட்ட இளமதிதன் கேள்வி
    மயக்கத்தை மாற்றாத(து) ஏன்?
    -

    ReplyDelete

  10. வணக்கம்!

    தண்பா படைக்கும் தமிழ்ச்செல்வா்! இன்றளித்தார்
    வெண்பா விருந்து! வியக்கின்றேன்! - மண்ணுலகே
    மூத்த அகவையில் முன்னணியில் சீா்தொடுத்துப்
    பூத்த புலமையைப் போற்று!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  11. வணக்கம்!

    தமிழ்மணம் - 8

    ReplyDelete
  12. இயற்கைக்கு வெண்பா அழகு

    ReplyDelete