ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது ஒன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்
அவையில் பேசவா அய்யா அவர்களுக்கு நேரமிருக்கிறது.. கத்தி கூப்பாடு போடத்தான் நேரமிருக்கிறது
ReplyDeleteசிறந்த சிந்தனை
நன்றி!
Deleteசட்ட சபையும் மக்களவையும் கூச்சல் குழப்பம் வெளி நடப்பு என்றுதானே போய்க் கொண்டிருக்கிற்து.தங்கள் கவிதை சரியான சாட்டையடிதான்.
ReplyDeleteநடந்தால் நல்லது தான் ஐயா... நல்லது நடக்கட்டும்...
ReplyDeleteநன்றி!
Deleteபாதி நாட்களில் குழப்பமும் கூச்சலும் தான்.... :(
ReplyDeleteநன்றி!
Deleteசெவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
ReplyDeleteசிந்தனை செய்யின் தடைபடுமா!//
நடந்தால் நல்லது தான் ஐயா
ஓட்டு ஓட்டு என்று நாம்
ReplyDeleteஅவர்களைத் தான் “ஓட்ட“ வேண்டும்.
கவிதை அருமை புலவர் ஐயா.
நன்றி!
Deleteஉங்கள் கவிதையில் வெளிப்படும் ஆதங்கம்தான் என்னுடையதும் ஐயா!
ReplyDeleteநன்றி!
Deleteநன்று சொன்னீர் அய்யா. அனைவருடைய ஆதங்கமும் இதுதான்
ReplyDeleteநன்றி!
Deleteகவிதை சிறப்பு ...
ReplyDeleteநன்றி!
Deleteநியாமான ஆதங்கத்தை அழகாய் கவிதை வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி!
Delete