இனிய அன்பர்களே!
சில நேரங்களில் சில சூழ்நிலைகளால் கவிதை வருவதுண்டு
அவ்வகையில் வந்த கவிதை இது!
ஊரில், என் நண்பன்! என் கவிதைப் பிரியன்,கோபித்துக் கொண்டு
இரவு வீட்டை விட்டு சென்னை வந்து விட்டான். இல்லமே
அழுது புலம்பியது. நண்பரோடு தங்கியிருந்த அவனை,சென்னை வந்து
யார் அழைத்தும் வர மறுத்து விட்டான்
நான் பின் வரும் கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்
அடுத்த நாளே வந்து விட்டான்!
அன்னையின் கண்ணீர் இங்கே
ஆறெனப் பெருகி ஓட
சென்னையும் சென்றாய் அங்கே
சென்றுநீ என்னக் கண்டாய்
உன்னுரு காட்டும் நிழலை
ஒழித்திட முயலல் மடமை
என்னுயிர் நண்பா இதனை
எண்ணிட மறந்தாய் ஏனோ
இடமிலை என்று நீயும்
இவ்வூரினைப் பிரிந்து செல்ல
திடமிகு உமதுத் தந்தை
தீதென்ன செய்தேன் என்றே
உடலுமே குலுங்க குலுங்க
உள்ளமே நொந்து அழுதார்
மடமையாம் நண்ப இந்த
மனநிலை பெற்றாய் ஏனோ
பெ ற்றவர் சுற்றம் நீங்கி
பிரிதொரு ஊரும் செல்ல
பற்றுமே அற்றார் போல
பறந்தனை இரவில் நன்றோ`
கற்றவர் செய்யும் செயலா
கண்ணீரோ வெள்ளம் புயலா
உற்றவன் நீதான் என்றால்
உடனடி விரைந்து வாவா!
புலவர் சா இராமாநுசம்
நண்பனுக்கழகாய் கவிதையால் இடித்துரைத்து நண்பனின் மனதை மாற்றியிருக்கிறீர்கள். ஆனால் ஐயா... இந்த மாதிரி கவிதை கிடைக்குமென்றால் அதற்காகவே மறுபடியும் சென்னைக்கு ஓடிப் போகலாம் என்று நிச்சயம் உங்கள் நண்பருக்குத் தோன்றியிருக்கும்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
பாருங்க அநியாயத்தை...
ReplyDeleteகவிதை அனுப்பி மிரட்டியிருக்கீங்க....
நல்லது...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
இப்படியொரு அருமையான கவிதை தனக்காக நீங்கள் பாடவேண்டுமென்பதை நோக்காகக்கொண்டு நண்பர் செனைக்கு விரைந்திருப்பார்போலும்.
ReplyDeleteஅழகான வரிகள். சிறப்பாக இருக்கிறது...
ஐயா அங்கு என் வலைப்பூவிற்கும் வந்து வாழ்த்தினீர்கள். மிக்க மிக்க நன்றி ஐயா!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் உங்களுக்கு!
த ம.4
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
உண்மை தான் ஐயா இப்படி ஒரு கவிதை பெறவே நண்பர் வந்திருப்பார் போல..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
அழகான அருமையான கவிதையை உருவாக்கிய நண்பனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
தாய் தந்தையர் படும் பாட்டுக்காகத் திரும்பி வாராவிட்டாலும் தங்கள் கவித்தமிழ் பாடும் பாட்டுக்காக கட்டாயம் திரும்பியிருப்பார். சூழலுக்கேற்பப் படைத்த சீரிய கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
உங்கள் கவிதை மூலம் நண்பர் மனம் திருந்தி திரும்ப வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி தந்தது.....
ReplyDeleteநல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி புலவர் ஐயா.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமாறாத மனமும் மாறிவிடுமே
ReplyDeleteஇதுபோன்ற கவிதையைக் கண்டால்....
அருமையாக இருக்கிறது பெருந்தகையே....
கவிதை விடு தூது மூலம் நண்பனை திரும்பப் பெற்றிருக்கின்றீர்கள்.
ReplyDeleteமனதை மாற்றிடும் கவிதை அய்யா. நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteதகப்பனின் மன வேதனையை தமிழைக் கொண்டு அலங்கரித்து பொறுப்பாய் சொல்லி அழைத்தமை நன்று.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Delete