இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்
இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!
அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்
அன்னையவள் தாரமவள் மறந்தா? போனேன்!
குன்றன்ன துயர்தன்னை நெஞ்சில் உற்றேன்-ஆனால்
குறைதீர இருமகவை நானும் பெற்றேன்!
நன்றென்னைக் காக்கின்றார் எனதுப்
பெண்கள்-என்றும்
நலன்பேண நான்காணும் இரண்டு கண்கள்!
செம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ!-தனிமை
சிறைபட்டு கிடக்கின்றேன்
நானும் இன்றோ!
வெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்
வேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால!
அம்பலமே இல்லாத ஆடல் தானே-இன்று
ஆயிற்றே என்நிலையும்! வாழ்தல் வீணே!
எம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்
எல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்!
துடுப்பில்லா தோணியென விட்டுச்
சென்றாள்-எட்டா
தொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்!
பிடிப்பில்லா வாழ்கையிது! எதற்கு வேண்டும் –மனம்
பேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்!
நடிப்பிப்லா நாடகமே என்றன்
வாழ்வே –நான்
நடைப்பிணமே! விரைவாக வருமா வீழ்வே!
இடுப்புள்ள கைபிள்ளை ஆனேன்
இன்றே –இனி
இறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே!
புலவர் சா
இராமாநுசம்
கவிதை நெடுகிலும் தாங்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மீது வைத்த அன்பும் பாசமும் தெற்றெனத் தெரிகின்றன. உங்கள் மனதில் நிரம்பித் ததும்பும் வேதனையையும் உணர முடிகிறது. கடைசி வரியை எழுதியதன் மூலம் அந்த வேதனையை எங்கள் நெஞ்சிலும் கடத்தி விட்டீர்களே ஐயா!
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
கண்ணீரால் ஒரு கவிதை. உங்கள் மனைவி ரொம்ப கொடுத்துவைத்தவர்.
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
மனைவியை பிரிந்ததும் நமக்கும் நம் உயிர் பிரிந்து விடுகிறது எஞ்சி இருப்பது உடல் மட்டுமே, அன்பில் உருகி எழுதிய கவிதை கண்ணீரை வரவைத்து விட்டது அய்யா.
ReplyDeleteஐயா.. துணையை இழந்த வாழ்வு கொடுமை. அதனில் மேலும் முதுமையில் தனிமை கொடுமையிலும் கொடுமை.
ReplyDeleteஉங்கள் வலி தெள்ளத்தெளிவாய்த் தெரிகிறது. மனதை ஆற்றிக்கொள்ளுங்கள். மிகுதிக்காலமும் நீங்கள் உடல் நலமுடன் வாழவேண்டும். அதற்கு உளமும் நலம்பெறவேண்டும்.
அன்னையின் ஆன்மா சாந்தியடையவும், உங்களுக்கும் மன அமைதி கிட்டவும் பிரார்த்திக்கின்றேன்...
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
அருமையான கவிதை. பிரிவின் கொடுமையை அனுபவிக்கும் உங்களின் உள்ளத்துடிப்பை கவிதையின் வரிகள் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன. இப்படி ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான
ReplyDeleteநினைவாஞ்சலியைப் படைக்கும் திறமை காலத்தால் அழியாத காதலுக்கு மட்டும் தான் உண்டு.
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
உங்கள் கண்ணீர்க் கவிதை! நெஞ்சை நெக்குருகச் செய்தது! அன்னையின் ஆன்மாவிற்கு என் இதய அஞ்சலி!
ReplyDeleteமனதை கலங்க வைக்கிறது...
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
மனைவி மீது நீங்கள் கொண்ட ஆழ்ந்த காதல் புரிகிறது ஐயா.!எப்படிப்பட்ட இல்லறம் வய்த்தது உங்கள்: இருவருக்கும்!
ReplyDeleteதலை வணங்குகிறேன்
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
தங்கள் துணைவியாரைப் பிரிந்து தாங்கள் படும் வேதனையை ஒவ்வொரு வரியிலும் உணர்கிறேன். வேதனைப்படும் மனத்தை ஆற்ற தமிழால் மட்டுமே இயலும். என்றும் தங்களுக்குத் துணையிருக்க அன்னைத்தமிழை வேண்டி நிற்கிறேன் ஐயா.
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
பிரிவுத் துயர் சொல்லும் உருக்கமான கவிதை ஐயா! தாங்கள் துணைவியார் இல்லை. ஆனால் தமிழ் உங்களுடன் இருக்கிறது. தமிழ் உங்கள் துயர் குறைக்க உதவட்டும்.
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
நடிப்பிப்லா நாடகமே என்றன் வாழ்வே –நான்
ReplyDeleteநடைப்பிணமே! விரைவாக வருமா வீழ்வே!//
வேண்டாம் வீழ்வே வேண்டும் எங்களுக்கு கவிதை வாழ்வே.
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் தந்துநான் தாழ்பணிந்தேன்! உன்றன்
அமிழ்தத் துணைவியை ஆழ்ந்து!
இறையிடத்தில் உன்னிணை ஆன்மா திளைத்தே
நிறையிடம் கொள்ளும் நிலைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ReplyDeleteதமிழ்மணம் 7
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
கவலை ததும்பும் வரிகள்...
ReplyDeleteகனக்கிறது நெஞ்சம் புலவர் ஐயா.
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
வருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
Deleteதங்கள் துணைவியார் ஆன்மாவிற்கு என் இதய அஞ்சலி மற்றும் என் பிரார்த்தனைகள்....
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
Deleteமனம் கனத்துப்போனது பெருந்தகையே...
ReplyDeleteஅம்மாவுக்கு என் மனமார்ந்த இதய அஞ்சலிகள்...
வேதனை மிகு வரிகள் இதயத்தைக் கனக்கச் செய்கின்றன அய்யா. வாழ்வென்றாலே சோதனைதானே, அம்மாவின் ஆன்மா என்றென்றும் இறையின்பத்தில் திளைத்திருக்க, எல்லாம் வல்ல ஆண்வடனை வேண்டுகிறேன் அய்யா
ReplyDeleteவருகை தந்ததோடு ஆறுதலும் தந்த உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!
ReplyDelete