சாக்கடையும் குடிநீரும் கலந்து
வருதே-மனம்
சகிக்காத நாற்றமிகத் தொல்லை
தருதே!
நீக்கிடவே முடியாத மேயர்
ஐயா –உடன்
நேரில் ஆய்ந்து பாருங்கள் பொய்யா மெய்யா?
நோக்கிடுவிர் தொற்றுநோய் பரவும்
முன்னே-மக்கள்
நொந்துமனம் வருந்திடவும் செய்வார்
பின்னே!
போக்கிடமே
ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி
புலம்புவதா ? ஆவனவே செய்வீர்
தாங்கள்!
மழைநீரின்
வடிகால்வாய் வேலை முற்றும் –மிக
மந்தகதி! கேட்டாலும் மதியார் சற்றும்!
அழையாத விருந்தினராய் கொசுவின்
கூட்டம் –பெரும்
அலையலையாய் வந்தெம்மை தினமும்
வாட்டும்!
பிழையேதும் செய்யவில்லை ஓட்டே போட்டோம் –உயிர்
பிழைப்பதற்கே யாதுவழி!? ஐயா கேட்டோம்!
கழையாடும் கூத்தாடி ஆட்டம் போன்றே –வாழ்வு
காற்றாடி ஆடுவதைக் காண்பீர்
சான்றே!
நாள்தோறும் விலைவாசி நஞ்சாய் ஏற –ஒரு
நாள்தோறும் விலைவாசி நஞ்சாய் ஏற –ஒரு
நாள்போதல் யுகமாக எமக்கு மாற!
ஆள்வோர்க்கும் குறையொன்றும் எட்ட வில்லை-மேயர்
ஐயாவே நீரேனும் தீர்பீர் தொல்லை!
குடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
கொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க
யாண்டும்!
விடிவதனை எதிர்பார்த்து காத்துக் காத்தேன் –இரவு
விழிமூட இயலாமல் கவிதை யாத்தேன்!
புலவர் சா இராமாநுசம்
மேயர் "மனசு" வைக்க வேண்டும்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteகுடிநீரின் குறைதன்னை போக்க வேண்டும்–தீரா
ReplyDeleteகொசுத்தொல்லை! இல்லாமல் நீக்க யாண்டும்!//
குடிநீர் குறையும் தீர வேண்டும்
கொசுத்தொல்லையும்மறைய வேண்டும்
குறையில்லா நல்லுறக்கம் கிடைத்திட்டு-தினமும்
குடும்பத்தோடு நீங்களும் தூங்க வேண்டும்
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமேயரை தூக்கிட்டு போயி கிணத்துக்குள்ளே முக்குங்க அய்யா ஹி ஹி....
ReplyDeleteமேயருக்கு அம்மா புகழ் பாடவே நேரம் போதாதே!
ReplyDeleteகோரிக்கைக் கவிதை நன்று அப்படியே புகாராக மேயருக்கு அனுப்பிவிடலாம்.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஆதங்கத்தினை அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா.
ReplyDeleteஅழகிய கவிதை. அதுதந்த கருத்தோ ஆழ்ந்த கவலை...
உரியவர்கள் கவனத்திற்கு அறைந்து சொல்லவேண்டும்...
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteமேயரை தூக்கிட்டு போயி கிணத்துக்குள்ளே முக்குங்க அய்யா ஹி ஹி.... நாஞ்சில் மனோ அவர்கள் சொன்னது போல் செய்தால் தான் வேலைக்காகும்.
ReplyDeleteமுரளிதரன் அவர்கள் சொன்னது போல் செய்தால்
கோரிக்கைப் பேப்பர் நாம் வெளியேரும் முன்
வேர்கடலை விற்பவர்க்குப் போய் விடும்.
(முதலில் தமிழ் நாட்டில் மேயருக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியுமா...?)
புலவர் ஐயா... உங்களின் கவிதையும் அதன் கருவும்
அருமையாக உள்ளது. நம் நாட்டின் நிலைகளை நாளைய
தலைமுறைகள் உங்களின் கவிதையின் மூலம் தான் உணருவார்கள்.
ஆதங்கங்களைத் தொடருங்கள்.
நாங்களும் படித்து மனத்தை ஆற்றிக் கொள்கிறோம்.
நன்றி புலவர் ஐயா.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்யாத நாடாகவே நம் நாடு உள்ளது.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteநல்ல கவிதை......
ReplyDeleteமேயருக்கு மக்களுடைய குறைகளைத் தீர்க்க நேரம் இருப்பதே இல்லையே.... :(