முல்லைப் பெரியார் அணைபற்றிய தீர்ப்பு விரைவில் வரயிருக்கிறது. அது பற்றி அன்று தமிழகம் போராடிய போது, நாம் எழுச்சி பெற நான் எழுதிய கவிதை இன்றைய சூழ்நிலைக் கருதி, நினைவு படுத்த
மீள் பதிவாக இங்கே வருகிறது!
எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
இடித்த பின்னர் அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
கண்டவர் புத்தி மாறட்டும்
முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே
திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
பண்பா ? அறித்திடு கேரளமே!
அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
மனதில் நோயே உற்றவர்கள்
உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
மானத்தை உரிமையைக் காப்பாயா
புலவர் சா இராமாநுசம்
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
ReplyDeleteஇருப்பதைக் காண்பீர் நன்றாக//
பக்கத்து மாநிலங்கள் நம்மை பழிவாங்குகிறது
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசரியாகச்சொன்னீர்கள்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Delete
ReplyDeleteஉதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
உள்ளது சரியா கட்சிகளே
சரியான கேள்வி.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteஒற்றுமை இருக்க வேண்டும்...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Delete
ReplyDeleteஎழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
இடித்த பின்னர் அழுவாயா
எல்லாருமே கண்கெட்ட பிறகுதான்
சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.. என்பதை
அழகாக உரைத்திருக்கிறீர்கள் புலவர் ஐயா.
மீள்பதிவாயினும் அனைவரும் அவசியம்
ReplyDeleteபடிக்கவேண்டிய அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி!
Deletetha.ma 6
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉறங்கும் தமிழரை எழுப்ப இதுபோன்ற எழுச்சிமிகுக் கவிதைகளை எத்தனை மீள்பதிவுகள் இட்டாலும் தவறேதுமில்லை...அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteமீள் பதிவாக இருந்தாலும், மீண்டும் படிக்கும்போது நம் நிலை பார்த்து மனது கனத்தது.....
ReplyDeleteநல்ல கவிதை.
வருகைக்கு மிக்க நன்றி!
Delete