Saturday, April 27, 2013

புற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங்கே



 நானா நீயா பாரென்றே
     நடந்திட  மத்திய அரசின்றே!
 வீணாய் தம்முள் தாம்சாடி
     விரையம் ஆகிடப் பலகோடி!
 காணோம் ஏதும் பலனொன்றே
     கடமை கண்ணியம் நிலையின்றே!
 ஏனாம் இந்த இழிநிலையே
     எண்ணிப் பார்க்கவும் வழியிலையே !

புற்று நோயாம் ஊழலிங்கே
      போனது என்றால் ஒழிவதெங்கே
 உற்றுப் பார்த்தால் மனிதரிலே
      ஊழல் செய்யாப் புனிதரிலே!
 மற்றவர் செய்தால் ஊழலெனல்
      மறைப்பார் ஊழல் தம்மதெனில்!
 கற்றவர் அறிந்தே செய்கின்றார்
      கல்லார் அறியாது செய்கின்றார் !

முடங்கிப் போவதோ அவையிரண்டும்
     முறையா சரியா படை திரண்டும்!
 அடங்கிப் போனபின் பலனென்ன
     அழிவதுப் பணமே கோடியன்ன!
 திடமொடு ஆய்து முடிப்பீரோ
     திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ!
 நடந்தது நடந்ததாய் போகட்டும்
     நல்லது எதுவோ ஆகட்டும்!

அனைத்து மக்களும் வெறுப்பானார்
   அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்!
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
   நிம்மதி கெட்டே ஏசிடுமே!
தினைத் துணையளவில் எளிதாக
   தீர்த்திட முயலல் வழியாக!
பனைத் துணையளவு பெரிதாக
   பரவ வளர்த்தல்  தவறன்றோ?
 
        புலவர் சா இராமாநுசம்
         

13 comments:

  1. அவைக்குச் சென்றோர் அதையும் அடைப்பு செய்துவிட்டு
    சுவைக்கச் சென்றுவிடுகின்றனர்...
    அருமையான கவியாக்கம் பெருந்தகையே...

    ReplyDelete
  2. உற்றுப் பார்த்தால் மனிதரிலே
    ஊழல் செய்யாப் புனிதரிலே!//
    ஆம் கொடுப்பதும் கூட தவறுதான்.

    ReplyDelete
  3. நன்றாகச் சொன்னீர்கள்! அருமையான கவிதை ஐயா!

    புற்றுநோயைக்கூட மாற்றலாமாம் ஆனா இந்த ஊழல்நோய்
    பாழாய்ப்படுத்தும் கொடுமைக்கு மருந்தே இல்லையாம் ...

    த ம. 3

    ReplyDelete
  4. நினைத்துக் பார்க்க உண்மையிலேயே கூசுகிறது அய்யா

    ReplyDelete
  5. //அனைத்து மக்களும் வெறுப்பானார்
    அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்!//
    உண்மையான வார்த்தைகள் ஐயா!. என்று திருந்துவார்களோ?

    ReplyDelete
  6. அய்யா நன்றாராக சொல்லிருக்கிரீர்கள்..

    ReplyDelete
  7. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...

    ReplyDelete