முகநூலில்
நான் எழுதிய இவை!
தினம் ஒன்று எழுதியது!
எண்ணை உள்ளவரை இழுத்து எரிந்து ஒளியைத் தரும் திரியானது, எண்ணை வற்றியதும்
தன்னையே எரித்து ஒளியைத் தருதல் போல , சான்றோர்கள் தன்னை அழித்துக்
கொண்டாவது பிறருக்கு உதவவே முன் வருவார்கள்.
தவளை தன் வாயாலேயே தன் இருப்பிடத்தைக் காட்டி பாம்புக்கு பலியாவதைப் போல சில மனிதர்களும் தன் வாயாலேயே
கெட்டழிந்து போவார்கள்
அகத்தில் தோன்றுவதை நினைத்தபடி,
நினைத்த நேரம் முகநூலில் எழுதுவது எளிதாக இருக்கலாம். ஆனால் கத்தியின் கூர்மையைவிட பேனாவின் கூர்மை வலிமையானது என்பதை உணர்ந்து நாம் எழத வேண்டும்.
கட்டிய ஆடை நழுவும் போது கை தானாகச் சென்று உதவுதல் போல உற்ற
நண்பன் துயர் படும்போது அவன் கேட்காமலேயே நாம் வலிய சென்று உதவுதலே
உண்மையான நட்பு! ---- வள்ளுவர்
புலவர் சா இராமாநுசம்
மூன்றாவதை அனைவரும் அகத்தில் கொள்ள வேண்டும்...
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteமணியான கருத்துகள்
ReplyDeleteபடித்தேன் ரசித்தேன் நன்றிங்க அய்யா
ReplyDelete