குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம்
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதனை
எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்
புலவர் சா இராமாநுசம்
உங்கள் வேதனை புரிகிறது ஐயா :(((
ReplyDeleteஎண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
ReplyDeleteஇழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்
ஆம் ஐயா நாமும் உடன்தையாகினோம் நம் மக்களைக் காக்கத் தவறினோம்
உண்மை தான் ஐயா...
ReplyDeleteவிரைவில் மாற வேண்டும்...
உங்களின் கவலையையும் நிஜத்தையும் கவிதையாக அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள்.துக்கமான கவிதை என்றாலும் உங்களின் கவிதை பிரமிக்க வைக்கிறது ஐயா
ReplyDeleteமாற வேண்டும் அய்யா..
ReplyDeleteநம் கைகள் தானே நம் குரல்வளையை
ReplyDeleteநம்பவைத்து அறுத்தது நாசம் நாசம் .
தம்பியர்கள் என்று சொன்ன தலைவர் எல்லாம்
தமிழினமே அழிவதற்கு செய்தார் மோசம்.
வெம்பி இனி அழுவதனால் என்ன பயன்
வேரறுந்து போனதடா ஈழ தேசம்.
தெம்பில்லை திராணியில்லை அழுவதற்கும்
துரோகத்தை வரலாறு பேசும் பேசும்
இந்நிலை மாற வேண்டும்
ReplyDelete