நம்பும்
படியே இல்லையா-நம்
நாட்டின் நடப்பு சொல்லையா!
தும்பை விட்டு
வால்தன்னை-பிடித்து
துரத்த நினைப்பது போலய்யா!
விலகி விட்டோம் என்றொருவர் -ஈழம்
வேண்டினார் அவையில் மற்றொருவர்
இலவு
காத்த கிளிதானே -நம்
ஈழ மக்கள் நிலைதானே!
மாணவர் எழுச்சி கண்டோமே-மனதில்
மகிழ்ச்சி நாமும் கொண்டோமே
வீணல என்பதை
உணர்ந்தோமே-அவர்
வீரத்தில் விளைந்த தொண்டாமே!
அணையா விளக்காய் எரியட்டும்-ஈழம்
அடைவோம் உலகுக்கே புரியட்டும்
துணையாய் என்றும் இருப்போமே-நம்
தோளும் கோடுத்து சுமப்போமே!
தேர்தல்
விரைவில் வந்திடுமே- அதுவும்
தினமும் மாற்றம் தந்திடுமே
ஊர்தனில் இதனை உணர்த்திடுவீர்-கடந்த
உண்மைகள் தம்மை உரைத்திடுவிர்!
நாடகம் நடத்தும் கட்சிகளை -நாளும்
நடக்கும் பற்பல காட்சிகளை
ஊடக வாயிலாய் உணர்வாரே- தம்
உள்ளத்தில் பதித்து கொள்வாரே!
புலவர் சா இராமாநுசம்
ஊடக வாயிலாய் உணர்வாரே- தம்
உள்ளத்தில் பதித்து கொள்வாரே!
புலவர் சா இராமாநுசம்
அணையா விளக்காய் எரியட்டும்-ஈழம்
ReplyDeleteஅடைவோம் உலகுக்கே புரியட்டும்
துணையாய் என்றும் இருப்போமே-நம்
தோளும் கோடுத்து சுமப்போமே!
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா உங்களின் இந்த உணர்வினைக் காணும் போதெல்லாம் ! மிக்க நன்றி பகிர்வுக்கு .
மிக்க நன்றி!
/// அணையா விளக்காய் எரியட்டும்-ஈழம்
ReplyDeleteஅடைவோம் உலகுக்கே புரியட்டும்
துணையாய் என்றும் இருப்போமே-நம்
தோளும் கோடுத்து சுமப்போமே! ///
அருமை...
வாழ்த்துக்கள் ஐயா...
மிக்க நன்றி!
1965-66 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, மாணவர்கள் கையில் மண்ணெண்ணெய் பாட்டில்களைக் கொடுத்து ரயிலை எரிக்கச் சொன்னார்கள். நல்ல வேளை, இப்பொதெல்லாம் மாணவர்கள் சொந்தமாகவே முடிவெடுக்கக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்...
ReplyDeleteமிக்க நன்றி!
இந்தியாவிற்கு தேர்தலும் ஈழத்துக்கு விடியலும் சொன்ன உங்களின் ஆசை விரைவில் நிறைவேறட்டும் அய்யா.
ReplyDeleteமிக்க நன்றி!
அணையா விளக்காய் எரியட்டும்-ஈழம்
ReplyDeleteஅடைவோம் உலகுக்கே புரியட்டும்
துணையாய் என்றும் இருப்போமே-நம்
தோளும் கோடுத்து சுமப்போமே!
நிச்சயமாக துணை நிற்போம்
மனம் தொட்ட கவிதைக்கு
மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி!
tha.ma 6
ReplyDeleteமிக்க நன்றி!
வழி மொழிகிறேன்
ReplyDeleteமிக்க நன்றி!
உங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும் அய்யா ..
ReplyDeleteமிக்க நன்றி!
ரத்தங்களும், கண்ணீரும், விதைகளும் நிச்சயம் ஈழம் மலர செய்யும் நம் மக்களின் துயர் துடைக்க செய்யும்.
ReplyDeleteமிக்க நன்றி!
சரியான சொற்கள்
ReplyDeleteமிக்க நன்றி!
நானும் வழிமொழிகின்றேன்
ReplyDeleteமிக்க நன்றி!
மிக்க நன்றி!
//நம்பும் படியே இல்லையா-நம்
ReplyDeleteநாட்டின் நடப்பு சொல்லையா!
தும்பை விட்டு வால்தன்னை-பிடித்து
துரத்த நினைப்பது போலய்யா!//
மிகச் சரியாக அழகாக சொல்லி விட்டீர்கள் ஐயா!