Wednesday, March 20, 2013

மதில்மேல் பூணை நிலைபோலும்-நம் மத்திய அரசின் நிலை!மேலும்




மதில்மேல் பூணை நிலைபோலும்-நம்
மத்திய அரசின் நிலை!மேலும்
புதிர்போல் பதிலும் தோன்றிடுமே-ஐயம்
புகுந்திட மனதில் ஊன்றிடுமே!
எதிலும் இதுவே வாடிக்கையா-என
எண்ணிட செய்வது வேடிக்கையா
பதிலில் குழப்பமே! தெளிவில்லை!-எங்கள்
பாரதப் பிரதமரே! இதுஎல்லை!

முழுவதும் அரசுக்குக் கிடைக்கிலையா-அன்றி
முழுமனம் கொண்டிட இடமிலையா
அழுவது போலிது நாடகமா-பதில்
அளித்தது எதற்கோ? பூடகமா!
தொழுவது எல்லாம் முடிந்தகதை-இங்கே
தோன்றும் மற்றோர் இடிந்தகரை!
எழுவது தடுத்திட முனைவீரே-ஓட்டு
இலங்கைக்கு எதிர்ப்பாய் தருவிரே!

சென்றது சென்றன ஆகட்டும்-நாம்
செய்தன பாபம்! போகட்டும்!
கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
கொடியோர் செய்தது? பல்லாயிரமா!
இன்றென வந்தது சிறுவிடிவே!-இதில்
எடுப்பீர் பிரதமரே நல்முடிவே!
நன்றென உலகம் வாழ்த்தட்டும்-தமிழ்
நாடும் மகிழ்ந்து போற்றட்டும்!

புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. விரைவில் விடிவு காலம் வரட்டும் ஐயா...

    ReplyDelete
  2. புலவர் ஐயா வணங்குகிறேன்.

    வலைச்சரத்தில் இன்று உங்கள் வலைப்பூ அறிமுகம் கண்டு வந்தேன்.
    வந்து இங்கு பார்த்ததும் வியந்தேன். அருமை என நான் சொல்வது மிகவும் குறைந்த வார்த்தைதான் ஐயா. அற்புதமாய் இருக்கிறது உங்கள் கவிதைகள்!

    இங்கு நீங்கள் கூறிய கவிதையில்
    //கொன்றன ஒன்றா ஆயிரமா?-சிங்களக்
    கொடியோர் செய்தது? பல்லாயிரமா!//
    அவர்கள் எமக்குச் செய்த கொடுமை நினைக்குந்தோறும் இதயம் துடிக்க மறக்குதையா....

    தொடர்ந்து வருவேனிங்கு. மீண்டும் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
  3. எப்போதும் போல துயர் நிறைந்த கவிதை வரிகள் .
    விரைவில் எல்லோரது மனமும் மகிழும் நிலை
    வரவேண்டும் :(

    ReplyDelete
  4. மௌன ராகம் பாடும் மத்திய அரசுக்கு நமது ஆதங்கம் எட்டுமா?
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை.

    ReplyDelete
  5. தீர்மானத்தை உப்புச்சப்பற்றதாக்கி ஆதரிக்கும் போலி நாடக அரங்கேற்றத்தை நிகழ்த்துவதிலும் பார்க்க தீர்மானத்தை எதிர்ப்பது மேலானது.இந்திய அரசின் வேஷத்தை காண்கையில் மனம் கொதிக்கிறது ஐயா

    ReplyDelete
  6. எல்லாம் நாடகம் தான் கவிதை அருமை

    ஐயா ஒரு சந்தேகம் பூனை க்கு 2 சுழி" ன" வா சுழி "ண" வா

    தவறெனில் மன்னிக்க !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. இரண்டு சுழி ன தான் ! சுட்டியமைக்கு மிக்க நன்றி
      மன்னிக்கப் படவேண்டியவன் நானே தவிர தாங்களல்ல!

      Delete
  7. நல்லது நடக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது!

    ReplyDelete
  8. எதிர்ப்பாய் வாக்கு போட்டிருக்கு .. இன்னும் வலிமை வேண்டுமென்றே நாம் கேட்கிறோம் ...
    வரிகள் அனைத்தும் மனசுக்குள் எறங்குது அய்யா

    ReplyDelete
  9. எல்லாம் நாடகம் தான் புலவரே...

    ReplyDelete
  10. நல்ல கவிதை....
    நாடகம் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் ஐயா....

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...