அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
காண்பது இன்றே கவலை தானே!
மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய் ஆனோம் தானே-நாம்
புரிந்தும் மறந்து போவோம் தானே!
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா பலரும் நடத்து கின்றார்-நமக்கு
சுரணை இலையெனக் காட்டு கின்றார்!
பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
செப்பிடின் வருவதோ பீதி எல்லை!
போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!
மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
ஆர்பாட்டம் செய்வது அறுவ ருக்கும்!
இரட்டை
வேடமே போடு கின்றார்-இங்கே
ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
ஆளவோர் செயலும் போகின் றதாம்!
மௌனம்
சம்மதம் என்ப தல்ல-மக்கள்
மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!
புலவர் சா இராமாநுசம்
// மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
ReplyDeleteமாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!//
ஐயா! பழமொழியை புதுமொழியாக்கி நாட்டு நடப்பை நயமாக சொன்னதற்கு நன்றிகள் பல.
நன்றி..
Deleteஇன்றைய நடப்பை சரியான சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteமுடிவில் உள்ளதை அவர்கள் அறிந்தால் சரி...
அருமையான கவிதை! இன்றைய அரசியலை அப்படியே படிக்கிறது! நன்றி!
ReplyDeleteநாட்டு நடப்பை நல்லதொரு கவிதையாக்கிச் சொல்லியிருக்கிறீர்கள்
ReplyDeleteமக்கள் மரக்கா விட்டால் அரசியல்வாதி மறக்க வைப்பான் .
ReplyDeleteஇன்றைய நடப்பை நயமாக சொல்லியிருக்கிறீர்கள் பெருந்தகையே...
ReplyDelete