Monday, March 4, 2013

சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்! சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!



உண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே
உயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே?
மண்ணாள வந்தோரோ மாற மாட்டார்
மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்!
எண்ணாது எதற்காக விரதம் ஐயா
இருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா!
கண்ணான ஓருயிரும் போகும் முன்னே
கருணைவிழி திறக்காத ? விளைவு என்னே!

கரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்
காந்தீய வாதிநீர் ! ஒருநாள் வெல்வீர்!
அறவழியில் போராட்டம் போதும் இதுவே
அண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே!
தரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே
தமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே!
சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்!
சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!


                                         புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. உடல் நிலை பாதிப்பு அடையாமல் இருக்க வேண்டுகிறேன்...

    நண்பரின் தளம்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...

    http://nadikavithai.blogspot.in/2013/03/33.html

    ReplyDelete
  2. ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து திருந்த வேண்டும்.

    ReplyDelete
  3. சமூக அக்கறையில் வந்து விழுந்த கவிதை
    உண்மையில் உங்களின் சமூக அக்கறை கலந்த மனவேதனைய அறிகிறேன்

    ReplyDelete
  4. தமிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

    "உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,
    பயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.
    இளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு"

    இம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.

    எனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.

    ReplyDelete
  5. பொன் முட்டையிடும் வாத்தான மதுக்கடைகளை, அரசு மூடும் என்பது சந்தேகமே.ஆனாலும் நல்ல வேளை. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதின் மூலம் ஒரு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    ReplyDelete
  6. சமூக நலன் கவிதையாக எதிரொலிக்கின்றது.

    ReplyDelete
  7. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...