Wednesday, February 27, 2013

இறைவன் படைப்பை வெல்ல ஆகாதே!




சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த 
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

குறிப்பு- என் பேரனின் ஆசைக்கு ஏற்ப
                 எழுதிய கவிதை.
       

18 comments:

  1. மயிலும் சிறுவனும் பேசிக்கொள்ளும் கவிதை அருமை.மழலையர்கள் அனைவருக்கும் சொல்லிதர வேண்டுமிதை.

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல படிக்கும் அனைவரையும் பால்ய நினைவுகளுக்கு அழைத்து செல்லும் ஐயா.

    ReplyDelete
  3. உங்கள் பேரனுக்கு மட்டுமல்ல, மற்ற பேரக் குழந்தைகளுக்கும் பிடிக்கும் இந்த பாடல்.

    ReplyDelete
  4. வழக்கம் போலவே நன்றாக இருக்கின்றது.குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்

    ReplyDelete
  5. ஐயா, நாங்களும் உங்கள் பேரன்கள் தானே! எமக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்துவிட்டது! இறைவன் படைப்பை வெல்ல இயலாதுதான்!

    ReplyDelete
  6. குட்டி குட்டி அழகிய கவிதைகள் ஜயா

    ReplyDelete
  7. உண்மையை அழகாக கவி பாடி சிறப்பித்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. எல்லாக் குழந்தைகளுக்கும், எங்களுக்கும் பிடிக்கும்! :)

    நல்ல கவிதை புலவரே....

    ReplyDelete
  9. ஆஹா! உரைநடைவடிவில் கவிதையா??? அருமை அருமை ரொம்ப ரொம்ப ரசித்தேன். வித்தியாசமான சிந்தனை ஐயா.

    ReplyDelete
  10. //இறைவன்
    படைப்பை வெல்ல ஆகாதே!//
    உண்மை அய்யா!
    உங்கள் பேரன் கொடுத்து வைத்தவன்!

    ReplyDelete
  11. உங்கள் படைப்பு கண்டு

    நானும் சிறுபிள்ளை ஆகிவிட்டேன் பெருந்தகையே....

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தான்

    ReplyDelete
  13. குழந்தையும் மயிலும், குழந்தையும் குயிலும் பேசும் கவிதை அருமை.

    ReplyDelete
  14. இயற்கையை யாரால் மாற்ற முடியும்...?

    அழகான கவிதை புலவர் ஐயா.

    ReplyDelete
  15. மயிலும் சிறுவனும் குலாவும் கவிதை மகிழ்ச்சியூட்டுகின்றது.

    ReplyDelete
  16. ஆஹா!அழகான கருத்துள்ள சிறுவர் பாடல்

    ReplyDelete