சிறுவன்
மயிலே
மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்
மயில்
வெள்ளி
வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்
சிறுவன்
அழகுமிக்கப்
பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த
பாடும் குயிலாய் ஆகாதோ
மயில்
குயிலின்
இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!
குறிப்பு-
என் பேரனின் ஆசைக்கு ஏற்ப
எழுதிய கவிதை.
மயிலும் சிறுவனும் பேசிக்கொள்ளும் கவிதை அருமை.மழலையர்கள் அனைவருக்கும் சொல்லிதர வேண்டுமிதை.
ReplyDeleteகுழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமல்ல படிக்கும் அனைவரையும் பால்ய நினைவுகளுக்கு அழைத்து செல்லும் ஐயா.
ReplyDeleteஉங்கள் பேரனுக்கு மட்டுமல்ல, மற்ற பேரக் குழந்தைகளுக்கும் பிடிக்கும் இந்த பாடல்.
ReplyDeleteவழக்கம் போலவே நன்றாக இருக்கின்றது.குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்
ReplyDeleteஅழகு... அருமை...
ReplyDeleteஐயா, நாங்களும் உங்கள் பேரன்கள் தானே! எமக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்துவிட்டது! இறைவன் படைப்பை வெல்ல இயலாதுதான்!
ReplyDeleteகுட்டி குட்டி அழகிய கவிதைகள் ஜயா
ReplyDeleteஉண்மையை அழகாக கவி பாடி சிறப்பித்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லாக் குழந்தைகளுக்கும், எங்களுக்கும் பிடிக்கும்! :)
ReplyDeleteநல்ல கவிதை புலவரே....
ஆஹா! உரைநடைவடிவில் கவிதையா??? அருமை அருமை ரொம்ப ரொம்ப ரசித்தேன். வித்தியாசமான சிந்தனை ஐயா.
ReplyDelete//இறைவன்
ReplyDeleteபடைப்பை வெல்ல ஆகாதே!//
உண்மை அய்யா!
உங்கள் பேரன் கொடுத்து வைத்தவன்!
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள் படைப்பு கண்டு
ReplyDeleteநானும் சிறுபிள்ளை ஆகிவிட்டேன் பெருந்தகையே....
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தான்
ReplyDeleteகுழந்தையும் மயிலும், குழந்தையும் குயிலும் பேசும் கவிதை அருமை.
ReplyDeleteஇயற்கையை யாரால் மாற்ற முடியும்...?
ReplyDeleteஅழகான கவிதை புலவர் ஐயா.
மயிலும் சிறுவனும் குலாவும் கவிதை மகிழ்ச்சியூட்டுகின்றது.
ReplyDeleteஆஹா!அழகான கருத்துள்ள சிறுவர் பாடல்
ReplyDelete