தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக்
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக்
கண்முன் காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள்
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும் எதற்கோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
நீண்ட, பழைய நாட்குறிப்பு, மீள்பதிவு
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
ReplyDeleteபழியும் வருமே வாய்திறவாய் //
அருமையான அந்த நாட்கள் ?
வருக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஇத்தரையில்
ReplyDeleteஎன்னுயிர் நிலைத்திருப்பதெல்லாம்
நித்திரை கலைக்கும்
முத்திரையாய் நீ பதித்த
சித்திர நினைவுகளே...
அருமையான கவிதை பெருந்தகையே....
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Delete//எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும் //
காலத்தால் அழிக்கமுடியாத கவிதை வரிகள். எத்தனை தடவை மீள்பதிவிட்டாலும் இரசிக்கக்கூடிய கவிதை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமீண்டும் மீண்டும் படித்தாலும் ரசிக்கத் தூண்டும் வரிகள். அருமையான கவிதை ஐயா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநல்லாயிருக்குங்க .
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஇளமையான கவிதை அய்யா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமீள் பதிவாயினும்,மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் பதிவு ஐயா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமிக மிக அருமை புலவர் ஐயா.
ReplyDeleteஇன்னும் எதற்கோ நடிக்கின்றாள்! இன்னிசை
பொன்னாய் கருத்தில் பொலிகிறது! - தன்னுள்
இதயம் திறக்கா(து) இருந்தால் உதிக்கும்
நிதமும் அவளின் நினைவு!
த.ம. 7
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமீண்டும் மீண்டும் நினைக்க வைத்த நினைவலைகளின் மீள்பதிவு
ReplyDeleteஎப்போதோ எழுதியது என்றாலும் இப்போதும் இனிக்கிறது கவிதை.
ReplyDeleteபழைய நினைவுகளை அசைபோடுவதற்கு எல்லோருக்கும் ஒரு காலம் வரும்..
ReplyDeleteமீள்பதிவானாலும் இளமையோடு இருக்கிறது கவிதை !
ReplyDelete