மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்
பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
தினமும் சேர்த்தது பலகோடி
சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
நாளும் உண்ணும் உணவறியா
பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
அக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!
புலவர் சா இராமாநுசம்
ஒவ்வொரு நாளின் விடியலின் போதும்
ReplyDeleteஇந்தக் கவிதையை ஒருமுறைப் படித்தால்
நல்ல மனிதனாக வாழ் நிச்சயம் முயல்வோம்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteஅனைவரும் அவசியம படித்து மனதில் பதிக்க வேண்டிய வீரியமான (க)விதை! கடைசி நாலு வரிகள் பளிச்சென்று மனதில் தைக்கின்றன. அருமை ஐயா.
ReplyDeleteயப்பப்பா! ஒவ்வொரும் வரியும் செம, அருமையான வரிகள் ஐயா. மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஅன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!
என்னவென்று சொல்வேன் !
புலமையொடு பண்பும் புகுந்து நின்றாடும்
வெறுங் கவிதை அல்ல இவைகள் நாம்
கற்றுணர வேண்டிய பொக்கிசங்கள் என்றே
மனம் வியந்து நின்றேன் !!!!...............
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
ReplyDeleteதினமும் சேர்த்தது பலகோடி
சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
நாளும் உண்ணும் உணவறியா
பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
பணம்பெரின் இல்லை சுகவாழ்வே // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! நன்றிஐயா!
ஆஹா... அருமையான கவிதை புலவர் ஐயா.
ReplyDeleteவணங்குகிறேன்!
த.ம. 5
மிகவும் ரசித்தேன்...அருமையான கவிதை ஐயா...
ReplyDeleteமண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
ReplyDeleteமறப்பின் இல்லை புனிதர்களே!// உண்மை ஐய்யா
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு போல ஒரு தத்துவக் கவிதை!
ReplyDeleteபிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் எத்தனை ஆட்டம்?
ReplyDeleteநன்று