Friday, August 31, 2012

உறவுகளே! ஒரு முக்கிய அறிவிப்பு

      உறவுகளே
                               வணக்கம்
    
        நேற்று ஒருகருத்தை என் வலையில் பதிவிட்டிருந்தேன் அதை
திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் எனவே, இனி ஆதரித்தோ, எதிர்த்தோ
யாரும் எழுத வேண்டாம் என்பதை மெத்தப் பணிவன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்

        ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் தாழ்வு, என
நான் உணர்ந்தவன் மட்டுமல்ல வகுப்பறையில் மாணவருக்குப் பாடம
நடத்தியவன்

        இன்று உள்ள சூழ் நிலை அதற்கு ஏற்றதாகயில்லை என்பது தெரிகிறது
நமக்கென ஒரு பாதுகாப்புத் தேவை என்றுதான் நான் கருதினேன்!அது
தவிர,வேறு, ஏதும் நோக்கமில்லை.

        ஆனால என் முயற்சி,  உள்ள ஒற்றுமைக்கும் ஊறு விளைவித்து விடுமோ  என்ற அச்சம் ஏற்படுவதாலும், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற அவப் பெயர் எனக்கு வந்துவிடக்கூடாது
என்பதாலும், நான் இந்த கருத்தை எழுத நேரிட்டது. மனிக்கவும்!

        நான், என்னதான் வயதில் மூத்தவனாக இருந்தாலும் வலையுலகில்
இளையோன் தானே

         ஆகவே, இப்போதும் சொல்கிறேன்! தங்கம் செய்யாததைக் கூட சங்கம்
செய்யும் என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தவன என்ற காரணத்
தினால் மூத்தப் பதிவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து சங்கப் பதிவினை செய்ய முன்வர வேண்டுமென , விரும்பி, வேண்டி, கேட்டுக்
கொள்கிறேன்

                                                 நன்றி


                                                                                புலவர் சா இராமாநுசம்

          

Thursday, August 30, 2012

அலையெனத் திரண்டு வந்த அன்பின் இனிய வலையக உறவுகளே!



அலையெனத் திரண்டு வந்த அன்பின் இனிய வலையக உறவுகளே
                 வணக்கம்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப
திண்ணியராய் செயல்பட்ட, சென்னைவாழ் வலையுலக இளைஞர்
படை, செயல் மறவராய் விளங்கி புயலெனச் செயல்பட்ட காட்சிகளை
நீங்களும் கண்டீர்கள்!  நானும் கண்டேன்.
         நன்றி! மறவரே! என்றும் மறவேன்!
     
      அடுத்து, அழைப்பை ஏற்று, எதிர்பார்த்தைவிட அதிக அளவில, தம்
பணிகளை ஒதுக்கியும் பணத்தைச் செலவிட்டும், உள்நாடு மட்டுமல்ல
வெளிநாட்டு  அன்பர்களும், குறிப்பாக, ஒருநாளும் இல்லாத திருநாள்
என்பது போல பெண்களும் திரண்டு வந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி
ஆகும்
       உங்களை,எல்லாம் பாராட்ட சொற்களே இல்லை!
    நன்றி என்ற சொல்லை பலமுறை சொல்லி, நீங்கள் இருக்கும்
ஒவ்வொரு திசை நோக்கியும் சிரம் தாழ கரம் கூப்பி என் இனிய
 பாராட்டையும், வாழ்த்துகளையும தெரிவித்துக் கொள்கிறேன்
       இதுவரை பலரும் எழுதிய பதிவுகளை படித்துப் பார்த்ததில்
உளம் முழுவதும் நிறைந்த உவகைக் கொண்டேன் ஒருசிலர் சுட்டிய
குறை கூட யோசனை என்ற அளவில் தான் இருந்தது
       பொதுவாக பதிவர் சந்திப்பு வெற்றி என்றே அனைவரும்
குறிபுபிட்டிருந்தது, ஏற்பாடு செய்த எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே
என்றால் அது மிகையல்ல
      மேலும், இவ் வெற்றிக்குப் அடுத்து என்ன? என்ற கேள்வி
பலரது உள்ளத்திலும் இருப்பதாக உணர்கிறேன்
     எப்படியோ தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்ற பெயரில்
ஓர் அமைப்பு உருவாகி விட்டது என்பது அனைவரும் அறிந்த
ஒன்றே! எனினும், இதுவரை............!
    நாம் தனித்தனி குழுமம் அமைத்து செயல்பட்டாலும
அனைத்தையும் தழுவிய மாநில அமைப்பை உருவாக்கி பதிவு செய்வது
மிகவும் இன்றியமையாதது

இன்று வலையுலகம் அனைவராலும்
கவனிக்கத் தக்க ஒன்றாக ஆகி விட்டது
நாம், சுதந்திரமாக நடக்கும் ஊழல்களையும், தவறுகளையும் சுட்டி எழுதுவதால் எல்லா கட்சிகளுமே நம்
மீது உள்ளுக்குள் எரிச்சல்கொண்டே
உள்ளன என்பது உண்மை! இன்றும்
இனி, எதிர் வரும் நாளிலும் எந்த ஆட்சி வந்தாலும் நம்முடை வலைகள் மீதும் பதிவர்கள் மீதும் அடக்குமுறை வரும். அதுபோது எதிர்த்து அறவழியில் போராட மாநிலம் தழுவிய வலுவான அமைப்பைப் பதிவு செய்வது அவசியம் மேலும், இது காலத்தின்
கட்டாய மாகும்
இதற்கு, தங்களின் ஆதரவும்
ஒத்துழைப்பம் இருக்குமானால் உறுதியாக செயல்படுத்தலாம்
எனவே இது பற்றி தங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
                    பிற பின்னர்
             புலவர் சா இராமாநுசம்
அன்பின் நண்பர்களே
சென்னை வாழ் பதிவர்கள் ஒன்று கூடி - சிந்தித்து - பல ஆலோசனக் கூட்டங்கள் நடத்தி - வருகிற 26ம் நாள் - ஞாயிறன்று - சென்னையில் திரு விழா கொண்டாடுவதெனத் தீர்மானித்து - அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர்.
அருமை நண்பர் மது மதி அழைப்பிதழகளை அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.
[Image]
அழைப்பு கிடைத்த நண்பர்களும் மற்ற நண்பர்களும் திரு விழாவில் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள் :
http://kavithaiveedhi.blogspot.com/2012/08/blog-post_6411.html
சென்னையில் சந்திப்போம் நண்பர்களே
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Tuesday, August 28, 2012

பெண்ணே எரிந்துப் போனாயே!

மூவர்   தூக்குத்தண்டணையை நீக்க, தன் உயிரை மாய்த்துக் கொண்ட  
                       செங்கொடியின் நினைவு நாள்!  இன்று!
                                          வீரவணக்கம்


 பெண்ணே எரிந்துப் போனாயே-உயிர்
    பிரிந்து எங்கே போனாயோ
விண்ணே நீயும் சென்றாயா-ஓடி
    வேலூர் சிறையில் நின்றாயா
கண்ணீர் வற்ற அழுகின்றார்-மக்கள்
    கதறி துயரில் விழுகின்றார்
 எண்ணீர் மத்தியில் ஆள்வோரே-இனி
    எத்தனை உயிர்கள் மாள்வாரே

 வஞ்சம்  மட்டுமே உருவாக-மூவர்
      வாழ்வைப் பறிக்கும் கருவாக
 நெஞ்சம் இரங்கா நிலைநன்றா-உயிர்
     நீங்கின் மீண்டும் வருமொன்றா
 தஞ்சம் அடைந்த  பறவைக்கும்-தன்
     தசையைத் தந்தவன் தமிழனடா
 பஞ்சில் நெருப்பைக் கொட்டாதீர்-தீ 
      பற்றி எரியும் திட்டாதீர்

 முடிவை ஆவர்கள் எடுக்கட்டும்-நாம் 
     முடங்கியா விடுவோம் ஆகட்டும்
 அடங்கி நடக்கும் தமிழனுக்கு-பிறரை
     அடக்கவும் தெரியும் தமிழனுக்கு
 திடமாய் முடிவு  எடுப்பாராம்-அவர்
     தினமும் அறப்போர் தொடுப்பாராம்
 விடவே மாட்டோம் என்பாரா-வீணில்
     விடத்தை அவரே தின்பாரா  

 இனிமேல்  உயிர்பலி வேணாவே-இன்று
    இழந்தோம் செங்கொடி வீணாவே
 குனியோம் எவர்கும் தலைகுட்ட-என்ன
    கோழையா நாமே தரைமுட்ட
 கனிவாய்ச் சொல்லியும் பயனில்லை-உயிர்
    காக்க தமிழரே உடன்ஒல்லை
 துணிவாய் தொடங்கும் அறப்போரே-மூவர்
    தூக்குக்  கயிற்றை அறுப்பீரே

                                   புலவர் சா இராமாநுசம்

Monday, August 27, 2012

வலையுலக வரலாறு போற்றும் கூட்டம்!jla


 வலையுலக வரலாறு போற்றும் கூட்டம்-சென்னை
    வலைப்பதிவு இளைஞர்களின் சாதனை! காட்டும்
அலைவழியே அகம்கண்டே பழகி வந்தார்-இன்று
    அன்புமுகம் காண்பதற்கே அலையாய் வந்தார்
இலைநிகரே எனப்பலரும் எடுத்துச் சொல்ல-வர
     இயலாரும் இல்லத்தே காண நல்ல
வலையுலக  திரட்டியவர் வசதி செய்தார்- அவரை
    வாழ்த்துகிறோம் ஒன்றாக, நன்றே செய்தார்

தானாக பொருள்தன்னை நாடி வந்தே-ஏதும்
   தன்னலமோ, எதிர்பார்போ இல்லார் தந்தே
தேனாக இனிப்பவராம் மக்கள் சந்தை-பாசத்
   தோழரைப் பாராட்டி மகிழ்வோம் சிந்தை!
நானாக இச்செயலை செய்தேன்!.? இல்லை!-என்
    நேசமிகு, பாசமிக இளையோர் ஒல்லை
மானாகத் துள்ளியவர் செய்தப் பணியாம்-மேலும்
   மட்டற்ற என்நன்றி அவர்கே அணியாம்

                                     (தொடரும்)

                         புலவர் சா இராமாநுசம்