Thursday, December 27, 2012

கற்சிலையும் கண்ணீரை வடிக்குமன்றோ –அட காமுகரே உணர்வீரா ? திருந்தலென்றோ

பச்சிளம்  பாவையவள்  நாசமாக ஒரு
    பாவிமகன்  வனபுணர்வால்  உயிரும்போக !
எச்சிலை   தேடுகின்ற   நாயும்கூட-தெருவில்
    இலைமறவாய் காய்மறவாய்  உறவைநாட !
பொற்சிலையாள்   பேருந்தில்   தில்லிதன்னில் ஒருத்தி
    பிணமுண்ணும்  கழுகுகளால்  அழிந்ததெண்ணில் !
கற்சிலையும்   கண்ணீரை  வடிக்குமன்றோ அட
    காமுகரே   உணர்வீரா ? திருந்தலென்றோ ?

தாயுண்டு,  தங்கையக்க உமக்கமுண்டா ஏன்!
    தாரமெனச்   சொல்லுதற்கோர்   மங்கையுண்டா
பேயுண்டு  என்பதற்கா  பிறந்தீர்நீரும் காமப்
      பேய்களே  தாங்காது   எந்தவூரும் !
வாயுண்டு   கதறியழ   வலிமையில்லை இளம்
    வஞ்சியர்கள்  வாழ்வதற்குக்  காப்புமில்லை!
நோயுண்ட  மனங்கொண்டார்  பெருகலானார்-எங்கு
     நோக்கினும்  பெண்னினமே   கருகலானார்!

வடநாடு   பொங்கியெழ  அங்கேயேனோ தம்
    வாயடைத்துக்  கிடக்கின்றார்  இங்கேயேனோ !
முடமாகிப்  போனாயோ  தமிழர்நாடே  -கட்சி
    முரண்பாடால்  வந்ததாம்  இந்தக்கேடே!
நடமாடும்  தெய்வந்தான்  பெண்களன்றோ-நாளும்
      நடப்பதனைக்  காணாகண்   புண்களன்றோ!
திடமான  முடிவெடுத்து  பெண்மைகாப்பீர் எனில்
    தேவையில்லை  பெண்னினமே  அழித்துவிடுவீர் !

                        புலவர்  சா  இராமாநுசம்

29 comments:

  1. அழுத்தமான வரிகள்! ஆழமான கருத்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  2. எச்சிலை தேடுகின்ற நாயும்கூட-தெருவில்
    இலைமறவாய் காய்மறவாய் உறவைநாட !

    நாயினும் கேடுகெட்ட மனிதர்களுக்கு தங்களின் சரியானா சவுக்கடி

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  3. நாடு எங்கே எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியவில்லை ஐயா.. இது போன்ற கொடுமைகளை எப்படி தடை செய்வது என அரசே தடுமாறுகிரதென நினைக்கிறேன்..வரிகளில் வருத்தமும் கோபமும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  4. அருமையாக சொன்னீர்கள் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  5. திடமான முடிவெடுத்து பெண்மைகாப்பீர் – எனில்
    தேவையில்லை பெண்னினமே அழித்துவிடுவீர் !

    நெஞ்சு பொறுக்கவில்லை ஐயா பெண்ணினம் படும் சீரழிவுகள் கண்டு :(
    முடிவு தாங்கள் சொல்வதுபோல் இரண்டில் ஒன்று அது எதுவாகினும்
    சரி .சமுதாயத்துக்கு பெண்கள் விடயத்தில் ஏன் இந்த மயக்கம் என்றுதான் புரியவில்லை !!.....

    ReplyDelete
  6. //முடமாகிப் போனாயோ தமிழர்நாடே -கட்சி
    முரண்பாடால் வந்ததாம் இந்தக்கேடே!//
    எல்லோருடைய உணர்வுகளையும், கவிதையில் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. நடமாடும் தெய்வந்தான் பெண்களன்றோ-நாளும்
    நடப்பதனைக் காணாகண் புண்களன்றோ!

    பட்டவர்களுக்கு நம்மால்
    பாட்டுதான் பாட முடியும்.

    நன்றி புலவர் ஐயா.
    த.ம. 7

    ReplyDelete
  8. விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  9. இந்தக்குற்றம் அதிகமாகிக் கொண்டே போகிறதே ஐயா!தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

      நன்மக்களே!
      வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
      நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
      இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

      பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
      மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
      காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
      இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
      மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
      புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

      மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
      நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
      இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
      வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
      காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
      மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

      -இந்தியன் குரல்

      Delete
  10. நன்றி!மீண்டும் வருக!

    ReplyDelete
  11. பல பக்கங்களில் எழுதி கொட்ட வேண்டிய உணர்வுகளை சிறு சிறு வரிகளில் சுருக்கமாக உணர்வுபூர்வமாய் சொல்லியமைக்கு மிக்க நன்றி புலவர் ஐயா!
    .

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  12. நியாயமான கோபங்கள் ஐயா ! ஆனால் பெண்களை காமுறும் பொருட்களாக பார்க்கும் மனோபாவாம் எங்குமுளவே. வெளியில் சொல்வோர் கொஞ்சம், சொல்லாதோர் மிஞ்சும்... !

    அவளுக்கும் உயிருண்டு, உணர்வுண்டு, ரத்தமுண்டு, சதையுண்டு, மலமுண்டு, சலமுண்டு.. உயிர்ப் பிண்டங்களை உருவாக்கித் தரும் சக்தியுண்டு என்பதை உணர்ந்தாலே பாதிப் பிரச்சனைகள் தீரும் .. அத்தோடு பெண் அனுபவிக்கும் துன்பங்களை மறைக்காமல் பொதுவில் பேசவும் வேண்டும். மாதம் மாதம் அவள் படும் துன்பம், பிள்ளையைச் சுமந்து படுகின்ற பாடுகள், பிள்ளையை பெறும் போது உயிர் துறந்து மீள்கின்ற தருணங்கள் யாவையும் பொதுவில் ஆண் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவற்றின் வலி ரத்தம் ஆகியவற்றை அறிகின்ற போது காமவெறிக் குறைந்து கழிவிரக்கம் பெருகும் என நான் நினைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
    2. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

      நன்மக்களே!
      வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
      நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
      இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

      பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
      மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
      காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
      இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
      மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
      புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

      மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
      நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
      இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
      வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
      காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
      மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

      -இந்தியன் குரல்

      Delete
  13. மிகச் சரியான கருத்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  14. நடமாடும் தெய்வம் பெண்களன்றோ! - அருமையான வரி. கவிதை மொத்தமும் கன்னத்திலறைகிற மாதிரி பளீரென்று இருக்கிறது. அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி!மீண்டும் வருக!

      Delete
  15. வணக்கம் ஐயா, அருமையான பதிவு, இன்று உங்களுடைய பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது.
    சென்று பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

      நன்மக்களே!
      வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
      நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
      இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

      பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
      மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
      காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

      சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
      இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
      மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
      புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

      மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
      நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
      இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
      வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
      காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
      மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

      -இந்தியன் குரல்

      Delete
  16. நன்றி!மீண்டும் வருக!

    ReplyDelete
  17. நம் நாடுகளின் பெண்களுக்கு இப்படியும் ஒரு சாபம் !

    ReplyDelete