Saturday, December 22, 2012

ஒழிந்ததா மரண பயமேதான் –அடடா! உலகே மகிழ்வின் மயமேதான்!




ஒழிந்ததா  மரண  பயமேதான் அடடா!
   உலகே  மகிழ்வின்  மயமேதான்!
அழிந்ததா ? இல்லை!  அகிலம்தான்-என்ன
   ஆகுமோ  என்றத்  திகிலில்தான்!
எழுந்திட  பொழுதும்  விடிந்தனவே ஆனால்
   எதுவுமே  இன்றி  முடிந்தனவே!
மொழிந்திட  மேலும்  ஏதுமிலை வாழும்
    முறைப்படி  வாழ்ந்தால்  தீதுமிலை!

இயற்கையை  ஒட்டியே  வாழ்வோமா அதை
    எதிர்த்து  அழித்தே  வீழ்வோமா!?
செயற்கை  நம்முடை  சீரழிக்கும் தினமும்
     செய்தால்  அதுநம்   வேரழிக்கும்!
உலகம்  அழிதல்நம்   கையில்தான் நான்
     உரைப்பது  சற்றும்  பொய்யில்தான்!
கலகம், கயமை, போராட்டம் என
    காண்பது  முற்றிலும்  மாறட்டும்!

பிறந்தார்  இறப்பதில்  மாற்றமுண்டா இதில்
    பேதம்  ஏதும்  காண்பதுண்டா !
சிறந்தார்!  செயலால்!  என்றேதான் உலகம்
     செப்பிட  வாழ்தல்   நன்றேதான்!
இறந்தார்  என்றால்  பெருங்கூட்டம் நம்
    இல்முன்  கூடின்  அதுகாட்டும்!
வருந்தார்  இல்லை  ஒருவரென நாமும்
     வையத்தில்  வாழ்வோம்  ஒருவரென!

                                புலவர்  சா  இராமாநுசம்

26 comments:

  1. ஆரம்ப வரிகளே அட்டகாசம்...
    அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  2. \\சிறந்தார்! செயலால்! என்றேதான் –உலகம்
    செப்பிட வாழ்தல் நன்றேதான்!//
    உண்மை ஐயா , நேர்மையாக செய்யும் செயலில்
    சிறந்தால் மகிழ்ச்சியாய் வாழலாம்

    ReplyDelete
  3. உலகே மகிழ்வின் மயமேதான்!

    அருமையான படைப்பு ஐயா..

    ReplyDelete
  4. எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அற்புதமான ஒரு கவிதை புலவர் அய்யா...

    உலகே மகிழ்வின் மயமேதான்!
    அதன் காரணமோ மாயன்தான்

    ReplyDelete
  5. நல்ல கவிதை புலவர் ஐயா!

    ReplyDelete
  6. நாமும்
    வையத்தில் வாழ்வோம் ஒருவரென!-அமாம் அய்யா..

    ReplyDelete
  7. அனைவருக்கும் தெளிவு படுத்தும் பகிர்வு ஐயா.

    ReplyDelete
  8. வாழும் முறைப்படி வாழ்ந்தால் தீதில்லை! அருமையான அறிவுரை! அழகான கவிதை! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  9. நன்றி! நன்றி!

    ReplyDelete
  10. "செப்பிட வாழ்தல் நன்றேதான்" ஆமாம். நல்ல அறிவுரை.

    ReplyDelete
  11. வாழும் முறைப்படி வாழ்ந்தால் தீதுமிலை!
    எளிமையான வரிகள் அய்யா,ஆனால் அதில்தான்
    எவ்வளவு உண்மைகள் புதைந்துள்ளன. நன்றி அய்யா.

    ReplyDelete
  12. //மொழிந்திட மேலும் ஏதுமிலை –வாழும்
    முறைப்படி வாழ்ந்தால் தீதுமிலை!//
    உண்மையான வரிகள்

    ReplyDelete
  13. பிறந்தார் இறப்பதில் மாற்றமுண்டா –இதில்
    பேதம் ஏதும் காண்பதுண்டா !
    சிறந்தார்! செயலால்! என்றேதான் –உலகம்
    செப்பிட வாழ்தல் நன்றேதான்!
    இறந்தார் என்றால் பெருங்கூட்டம் – நம்
    இல்முன் கூடின் அதுகாட்டும்!
    வருந்தார் இல்லை ஒருவரென –நாமும்
    வையத்தில் வாழ்வோம் ஒருவரென!//


    பிறப்பு, இறப்பு பற்றிய நல்ல கவிதை
    தெளிவு என்ற வெளிச்சம் எங்கும் வீசட்டும்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    இன்று 8.01,2012 உங்களின் கவிதை வலைச்சரத்தில் வெளிவந்துள்ளது வாழ்த்துக்கள் ஐயா அருமையான கவிதை,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. அன்பின் புலவர் சா இராமநுசம் அய்யா

    சிந்தனை நன்று - கவிதை அருமை

    வருந்தார் இல்லை ஒருவரென –நாமும்
    வையத்தில் வாழ்வோம் ஒருவரென! - அருமையான வரிகள்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete