அழியும் உலகம்
என்றேதான் -வலையில்
ஆய்வு
செய்தே இன்றேதான்!
மொழியும் செய்திகள்
பலபலவே –கருத்து
முரண்பட
அவைகள் மிகவுளவே!
விழிகளில் அச்சம்
தோன்றிடவும் –ஊர்
வீதியில்
விவாதம் நடந்திடவும்,
ஏனோ,
வழிபடும் கடவுளை
வணங்குகின்றார் –சிலர்
வருவது
வரட்டும் என்கின்றார்!
வாழவே விரும்புதல்
தவறில்லை –இங்கே
வாழ்பவர்
நிலையாய் எவருமில்லை!
சூழவே நாமும்
அறிந்தாலும் –பிறர்
சொல்வதைக்
கேட்டுத் தெரிந்தாலும்
வீழலே இன்னா
தென்றேதான் –எடுத்து
விளம்பினன்
வள்ளவன் அன்றேதான்!
என்றாலும்,
தாழவே உரைத்து ,
புனிதர்களாய் –நேயம்
தழைத்திட வாழ்வோம் மனிதர்களாய்!
உலகமே அழியின்
வாழ்வெதற்கு –அது
உண்மையா
பொய்யா ஆய்வெதற்கு?
கலவரம் போரொடு
ஊழல்தான் –எங்கும்
காணும்
உலகச் சூழல்தான்!
நிலவரம் இப்படிப்
போகையிலே –நான்
நினைத்துப்
பார்த்த வகையினிலே,
புதிய,
உலகம் தோன்றுதல்
நன்றாமே –நாம்
உணர்ந்து
வாழ்தலும் ஒன்றாமே!
புலவர் சா
இராமாநுசம்
ReplyDeleteவணக்கம்!
அழியும் உலகம் என்றேதான்
அளித்த கவிதை மிகநன்று!
பொழியும் மழைபோல் கவிதைகளைப்
புனையும் புலவா்! வணங்குகிறேன்!
மொழியும் இனமும் இருவிழிகள்!
மூச்சுக் காற்றுக் கவிஎன்பேன்!
வழியும் வகுத்து வாழ்கின்றார்!
வாழ்க! வாழ்க! பல்லாண்டே!
நன்றி! நன்றி!
Deleteபுதிய,
ReplyDeleteஉலகம் தோன்றுதல் நன்றாமே –நாம்
உணர்ந்து வாழ்தலும் ஒன்றாமே!//
நிச்சயமாக
குழப்பவாதிகளுக்கு சரியான தீர்வு சொல்லும்
அருமையான கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி! நன்றி!
Deleteமுதலில் வந்தவர் தாசன்தான்! -அவர்
ReplyDeleteமொழியும் கவிதை நேச்ன்நான்
கதலியின் கனியென இனிப்பாராம் -நம்
கன்னித் தமிழெனில் சுவைப்பாராம்
பதவியோ சுகமோ தேடாராம் -தூய
பண்பினில் விலகி ஓடாராம்
நிதமொரு கவிதை வழங்கிடுவார் -தமிழ்
நெறிகளை அதிலே முழங்கிடுவார்
அன்புத் தம்பி இரமணியே -நீர்
அளித்த மறுமொழி கண்டேனே
இன்பம் பொங்கின அதிகாலை-அழியா
இணையிலா உணர்வே கொண்டேனே
என்பும் தந்திடும் உறவேதான்-நம்மிடை
இருப்பது! இல்லை! கரவேதான்
துன்பம் என்றால் தோள்கொடுப்போம்-பொதுத்
தொண்டெனில் சேர்ந்து குரல்கொடுப்போம்
மிக்க நன்றி!
ReplyDeleteஅருமை ஐயா.......
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteபுதிய,
ReplyDeleteஉலகம் தோன்றுதல் நன்றாமே –நாம்
உணர்ந்து வாழ்தலும் ஒன்றாமே!
சிறப்பா அனைவருக்கும் தெளிவுபடுத்தும் விதமாக சொன்னீங்க ஐயா.
சிறப்பான கவிதை தந்தமைக்கு நன்றிகள் அய்யா..
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteஅருமையான கருத்துக்கள்! சிறப்பான படைப்பு! நன்றி!
ReplyDeleteநன்றி! நன்றி!
Delete//வாழவே விரும்புதல் தவறில்லை –இங்கே
ReplyDeleteவாழ்பவர் நிலையாய் எவருமில்லை!//
அருமை ஐயா..
நன்றி! நன்றி!
Deleteவழமை போல் நேரத்துக்கேற்ற சிறப்பான கவிதை
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteசிறப்பான சூழ்நிலைக்குப் பொருத்தமான கவிதை
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteநல்லவர்கள் மட்டும் வாழும் உலகம் அமைந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
ReplyDeleteநன்றி! நன்றி!
Deleteநன்றி! நன்றி!
ReplyDelete