Tuesday, December 18, 2012

எதையும் தாங்கும் இதயம்தான் –இனி என்றும் நமக்கே வேண்டுந்தான்




எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
கதையோ  அல்ல!  உண்மைநிலை! இன்று
    காண்பதில்! கேட்பதில் உள்ளநிலை
உதைபடா  மீனவன்  நாளில்லை அவன்
    உரைப்பதைக்  கேட்டிட ஆளில்லை
இதைவிடக்  கொடுமை  வேறுண்டா அரசுகள்
    இணைந்து செயல்படும்  வழியுண்டா

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

வானம்  பொய்பினும்  பொய்யாதாம் காவிரி
    வற்றிப்  போனதும்  மெய்யேதாம்
தானம்  தருவதாய்  நினைக்கின்றான் கன்னடன்
     தண்ணீர்  என்றால்  சினக்கின்றான்
மானம்  இழந்தே  வாழ்கின்றோம் உரிய
    மதிப்பும்  இழந்து  வீழ்கின்றோம்
ஏனாம்  இந்த  இழிநிலையே ஆய்ந்து
     எண்ணிட  ஒற்றுமை  நமக்கிலையே

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

கட்சிகள்  இங்கேப்    பலப்பலவே காணும்
     காட்சிகள்  தினமும்  பலப்பலவே
முட்செடி  முளைப்பது  போலிங்கே சாதி
    முளைவிடின்,  வாழ்வதும்  இனியெங்கே?
பதவியும்  சுகமும்  பெரிதாக நல்ல
      பண்பும்  குணமும்  அரிதாக
உதவும்  நிலைதான்  இனியில்லை நம்
     உயிருக்கு  கப்போ நனியில்லை

எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்

கொலையோ  இங்கே  கலையாக மாளா
     கொள்ளை  மேலும்  நிலையாக
தலையே  கேட்பினும்  கூலிப்படை வெட்டித்
    தந்திடும்  என்றால்  ஏதுதடை
விலைதான்  அதற்கும்  உண்டாமே இந்த
    வேலையே அவர்க்குத்  தொண்டாமே
அலைபோல்  மனமே  அலைகிறதே ஊஞ்சலாய்
      ஆடியே  தினமும்  குலைகிறதே
                எனவே
எதையும்  தாங்கும்  இதயம்தான் இனி
   என்றும்  நமக்கே  வேண்டுந்தான்
                 புலவர் சா இராமாநுசம்

28 comments :

  1. ayyya...!

    nitharsanagal ayyaaa!

    uthaipadukiarathu manam....

    ReplyDelete
    Replies


    1. தங்கள் வருகைக்குன் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. நீங்கள் சொன்னவைவைகள் அனைத்தும்
    நூற்றுக்கு நூறு மிகச் சரி
    இனி எதையும் தாங்கும் இதயம் கொள்ள
    பயின்று கொள்வதை விட வேறு வழி
    நிச்சயமாய் இல்லை
    மனம் சுடும் கரு ஆயினும்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்குன் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  3. எதையும் தாங்கும் இதயம்தான் –இனி
    என்றும் நமக்கே வேண்டுந்தான்.
    உண்மை தான் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்குன் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  4. கட்சிகள் இங்கேப் பலப்பலவே –காணும்
    காட்சிகள் தினமும் பலப்பலவே
    முட்செடி முளைப்பது போலிங்கே –சாதி
    முளைவிடின், வாழ்வதும் இனியெங்கே?
    பதவியும் சுகமும் பெரிதாக –நல்ல
    பண்பும் குணமும் அரிதாக
    உதவும் நிலைதான் இனியில்லை –நம்
    உயிருக்கு கப்போ நனியில்லை

    எதையும் தாங்கும் இதயம்தான் –இனி
    என்றும் நமக்கே வேண்டுந்தான்

    சத்தியமான வார்த்தைகள் இனி எதையும் தாங்கும்
    இதயம்தான் வேண்டும் ஐயா !.......:(

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்குன் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  5. அழகான கவிதை ஐயா..
    உண்மையில் எதையும் தாங்கும் இதயம் வேண்மே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்குன் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. அருமையான கவிதை புலவர் ஐயா.
    த.ம 7

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  7. கொடியதை எதிர்க்கும் இதயமும் வேண்டும்!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. கவிதையைப் படிக்கும்போது கவலைதான் வருகின்றது.
    "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  9. உண்மை ஐயா
    \\ எதையும் தாங்கும் இதயம்தான் –இனி
    என்றும் நமக்கே வேண்டுந்தான்//

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  10. அசத்தல் கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  11. // வானம் பொய்பினும் பொய்யாதாம் –காவிரி
    வற்றிப் போனதும் மெய்யேதாம்
    தானம் தருவதாய் நினைக்கின்றான் –கன்னடன்
    தண்ணீர் என்றால் சினக்கின்றான்
    மானம் இழந்தே வாழ்கின்றோம் –உரிய
    மதிப்பும் இழந்து வீழ்கின்றோம்
    ஏனாம் இந்த இழிநிலையே –ஆய்ந்து
    எண்ணிட ஒற்றுமை நமக்கிலையே//
    உண்மையை உரக்க உரைத்திருக்கிறீர்கள்
    தமிழன் என்றால் எதையும் தாங்குல் இதயத்தோடுதான் பிறக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  12. எதையும் தாங்கும் இதயம்தான் –இனி
    என்றும் நமக்கே வேண்டுந்தான்

    என்ற உண்மையை உரக்க உரைத்த அருமையான பகிர்வுகளுக்கு
    எண்ணம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  13. உண்மைதான்;எதையும் தாங்கும் இதயம் நமக்கு வேண்டும்தான்.

    ReplyDelete
  14. அருமையாக சொல்லி இருக்கீங்க புலவரய்யா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...