நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்
நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
அறிவில் குழப்பம் நிறைந்தனவே!
தினைத்துணை அளவே செய்நன்றி
தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
பயனறி உணரும் நல்லோரே!
அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
வேதனை குறையும் அக்கணமே!
கீழோ ராயினும் தாழஉரை
கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
இணையில் இன்பம் தேக்கிடுவீர்!
மக்கள் தொண்டு ஒன்றேதான்
மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
சொன்னதை செய்தல் அரிதன்றோ!
புலவர் சா இராமாநுசம்
நினைவில் ஏனோ வரவில்லை!
அனைத்தும் மனதில் மறைந்தனவே
அறிவில் குழப்பம் நிறைந்தனவே!
தினைத்துணை அளவே செய்நன்றி
தேடிச் செய்யின் மனமொன்றி!
பனைத்துணை யாகக் கொள்வாரே
பயனறி உணரும் நல்லோரே!
அடுத்தவர் வாழ்வில் குறைகண்டே
அன்னவர் நோக அதைவிண்டே!
தொடுத்திடும் சொற்கள் அம்பாக
தொடர்ந்து அதுவே துன்பாக!
கெடுத்திட வேண்டுமா நல்லுறவை
கேடென தடுப்பீர் அம்முறிவை!
விடுத்திட வேண்டும் அக்குணமே
வேதனை குறையும் அக்கணமே!
கீழோ ராயினும் தாழஉரை
கேடோ! குறையோ! அல்ல! நிறை!
வீழ்வே அறியா பெரும்பேறே
விளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
இணையில் இன்பம் தேக்கிடுவீர்!
மக்கள் தொண்டு ஒன்றேதான்
மகேசன் தொண்டு என்றேதான்!
தக்கது என்றே சொன்னாரே
தன்நிகர் இல்லா அண்ணாவே!
எள்ளல் வேண்டா எவர்மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ்வூட்டம்!
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
சொன்னதை செய்தல் அரிதன்றோ!
புலவர் சா இராமாநுசம்
//வீழ்வே அறியா பெரும்பேறே
ReplyDeleteவிளைவு அதனால் நற்பேரே!
பேழையில் உள்ள பணத்தாலே
பெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
இணையில் இன்பம் தேக்கிடுவீர்!
//
அருமையான வரிகள் அய்யா ...
\\பேழையில் உள்ள பணத்தாலே
ReplyDeleteபெருமையும் வாரா குணத்தாலே!
ஏழைகள் பசிப்பிணி போக்கிடுவீர்
இணையில் இன்பம் தேக்கிடுவீர்!//
உங்களின் அருமையான பதிவு நிச்சயம் எல்லோரையும் யோசிக்க வைக்கும்
மிக அருமை ஐயா.ரசித்தேன்.
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDeleteமிக அருமையான கவிதை!!
ReplyDeleteசிறப்பான கவிதை.....
ReplyDeleteஅருமையாச் சொல்லீட்டீங்க ஐயா
ReplyDeleteஐயா தங்களின் கவிதையினை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html வாருங்கள் ஐயா! நன்றி!
ReplyDeleteசொல்லல் யார்க்கும் எளிதன்றோ
ReplyDeleteசொன்னதை செய்தல் அரிதன்றோ!--மிகவும் சரியே...
சொல்லல் யார்க்கும் எளிதன்றோ
ReplyDeleteசொன்னதை செய்தல் அரிதன்றோ!//
மற்றவர்களிடம் குறை காணும் மனதை போக்கி ,நிறை மனமாக மாற்ற வேண்டும்.
சொன்னதை செய்ய பாடு பட வேண்டும்.
அருமையான கவிதை.