Saturday, December 15, 2012
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில் சென்றதும் என்ன செய்கின்றீர்
அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
உணர்ந்த ஞானி அன்னாரே
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
\\நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
ReplyDeleteநீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்//
எல்லோருக்கும் இப்படி சிந்தனை கொண்டு எதிர் கேள்வி கேட்டால் பொல்லாரும் யோசிப்பார் புலம்பலை அறிந்துனர்வார். அருமை ஐயா!
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநாட்டின் நிலையை மக்களின் அவதியை
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள்
காதுகள் அற்ற கோடிக்கால் பூதமல்லவா அரசு
எதிர்ப்பை நசுக்கத் துடிக்கும் அதற்கு
மக்களின் கோரிக்கைகளை கேட்கவா செய்யும்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி!
Deletetha.ma 2
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅழகு ஐயா....
ReplyDeleteஉரியவர்களிடம் போய்ச் சேர்ந்தால் சரிதான்
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
ReplyDeleteநாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
நல்லதோர் குடிமகன் அவன் பணி என்னவோ
அதைச் செவ்வனே செய்திடத் துடித்திடும் மனம் இன்று
தந்த கவிதை இது எந்நாளுமே போற்றுதற்கரியதே!.....
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
ReplyDeleteசாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
ஆள்வோருக்கு அளித்திட்ட அவசியமான அறவுரைகள்
அருமை ..பாராட்டுக்கள் ஐயா.
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteநஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
ReplyDeleteநாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
பஞ்சத்தில் செத்தாலும் பார்த்தும் பார்காது இருக்கும் ஆள்வோரே இவ்வரிகளை கண்டு திருந்துவாரோ ?
வருகைக்கு மிக்க நன்றி!
Deleteசரியாக சொன்னீர்கள் ஐயா
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி!
Deleteசாட்டையடிக் கவிதை ஐயா...
ReplyDeleteஅருமை..
வருகைக்கு மிக்க நன்றி!
Delete