Monday, November 26, 2012

கோடி எடுக்கவும் ஆளில்லை கொள்ளி வைக்கவும் ஆளில்லை!



 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய்நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய்நீ
வாழ்ந்தாய் அன்று பலர்போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர்தூற்ற
சூழ்ந்ததே உன்னைப் பழிபாவம்
   சொன்னால் எதற்கு வீண்கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா? வருமா இனிவேகம்

அல்லல்   பட்டவர்  ஆற்றாது 
    அழுகுரல் உனக்குக் கேட்கலையா
கொல்லப் பட்ட உடல்தன்னை
    குழியில் புதைப்பதை பார்கிலையா
சொல்லப் பட்டது மிகையில்லை
    சொன்னதே சேனல் துயரெல்லை
உள்ளம் உண்டா இல்லையா
    உண்மைத் தமிழா சொல்லையா

ஓடிஓடி தேடுகி  றார்தம்
     உறவினர் உடலைத் தேடுகிறார்
ஆடிப் போகுதே நம்உள்ளம்
    அருவியாய் கண்ணீர் பெருவெள்ளம்
தேடி எங்கும் தெருத்தெருவாய்த்
   திரியும் அவர்நிலை கண்டாயா
கோடி எடுக்கவும் ஆளில்லை
   கொள்ளி வைக்கவும் ஆளில்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமாகை 
     கூலிகள் உணர  சாவோமா
மாண்டார் மானம் காத்தாரே
      மற்றவர் பின்னர் தூற்றாரே
ஆண்டோம் அன்று இவ்வுலகே
     அடைவோம் இன்று அவ்வுலகே
          
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்
    
         சேனல் நான்கைக் கண்டு எழுதியது

7 comments:

  1. ஒன்றுபடுவோம்.காலம் போனாலும் நம் சுதந்திரம் பெறுவோம்.மனம் கனத்த்த வரிகள் ஐயா!

    ReplyDelete
  2. வரவும் வேண்டும்.
    எழவும் வேண்டும்!

    கவிதை, நீரு பூத்த நெருப்பைத் துாண்டத் தொடங்கும் புலவர் ஐயா.

    ReplyDelete
  3. ஒன்றுபட்டு மாற்ற வேண்டும் ஐயா...

    ReplyDelete
  4. பதுங்குவதும் பாய்வதும் பாவமென்று சொல்லி ஒதுங்குவதும் பண்பாடா தமிழ் பண்பாடா
    வீறுகொண்டு எழுந்து விடியலை தேடி வெற்றி முரசு கொட்டு தமிழா

    ReplyDelete
  5. நல்லவை நடக்க வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. மிதிபடுவதைவிட
    புதைபடுவது மேல்.

    ReplyDelete