Monday, November 26, 2012

மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் மகிழும் பகசே பாவீநீர்



மாண்டார் இல்லை மாவீரர்-வீணில் 
மகிழும் பகசே பாவீநீர் 
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம் 
மீள ஆட்சி புரிவாரே 
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில் 
வீணில் படுவீர் அலங்கோலம் 
பூண்டே அற்றுப் போவீரே-இந்த 
புலவனின் சாபம் ஆவீரே 

கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம் 
கெட்டவ உன்னை விடுவதில்லை 
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப் 
பழியும பாவமும் பின்னாலே 
விட்டதாய் நீயும எண்ணாதே-மேலும் 
வேதனை எதையும் பண்ணாதே 
நீ 
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி 
தோல்வியே உனகுலம விளங்காதாம் 

அல்லல் பட்டு ஆற்றாது-அவர் 
அழுத கண்ணீர் கூற்றாக 
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல் 
வாங்கி யாவது படித்தீரா 
கொல்லல் உமக்குக் தொழிலென்றே-உலகம் 
கூறச் செய்தீர் மிகநன்றே 
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து 
வீழப் போவது நீங்கள்தான் 

புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. அரசன் அன்று கொள்வான்
    தெய்வம் நின்று கொள்ளும்
    என்பார்கள்...

    தகாது செய்தவன்
    தன்னிலை இழந்து தவிப்பான்
    எனும் புலவரின் வாக்கு பலிக்கட்டும்....

    ReplyDelete
  2. அருமையாக முடித்துள்ளீர்கள் ஐயா...

    ReplyDelete
  3. உண்மையை உரைக்கும் நல்ல காத்திரமான கவிதை. நன்றி ஐயா.

    ReplyDelete
  4. அருமயான மறுப்பதிவு உண்மையை உணர்த்தியது நன்றி ஐயா

    ReplyDelete
  5. உங்களின் உண்மை வரிகள் அற்புதம் ஐயா

    ReplyDelete
  6. //வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
    வீழப் போவது நீங்கள்தான் //
    உங்கள் வாக்கு பலிக்கட்டும்!

    ReplyDelete
  7. விழ விழ எழுவோம்.நாம் தமிழர்கள் !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...