மாவீரர் நினைவாக...
எண்ணில்லாப் புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்
இதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்
மண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை
மேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி
கண்ணில்லாக் சிங்கள கயவர் நாளும்-அங்கே
காட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்
விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து
விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்!
அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று
அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே!
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்!
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
காலன்தான் வருகின்றான் மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
சொலகின்ற புலவனது சாபம் இதுவே!
எத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா
இயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
போதனையை அறிவாயா? வேண்டாம் மமதே!
புலவர் சா இராமாநுசம்
சாட்டையடி வரிகள்...
ReplyDeleteநன்றி ஐயா...
நல்ல காலம் பிறக்கட்டும்! அருமையான வரிகள்! நன்றி!
ReplyDeleteஎத்தனையோ உயிர்தன்னைப் பறித்தாய் நீயே-ஐ.நா
ReplyDeleteஇயம்பியதோர் கணக்கதனைத் தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
போதனையை அறிவாயா? வேண்டாம் மமதே!
கவிதைத் தீயாலே இட்ட சாபம் இதுவும் ஓர் நாள் பலிக்கும் ஐயா
கவலை வேண்டாம். பகிர்வுக்கு மிக்க நன்றி ......
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
ReplyDeleteபோதனையை அறிவாயா? வேண்டாம் மமதை! -என்கின்ற இந்த ஆழமாக புண்பட்ட மனதில் பொங்கியெழுந்த வரிகள் தாங்கள் ஓர் பெரும் புலவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன. வாழ்த்துக்கள் அய்யா!
புலவரின் சாபம் பலிக்கும்
ReplyDeleteபுலையர் வாழ்வை கெடுக்கும்
உண்மை ஐயா
புலவரது சாபம் இங்கே பலிக்கட்டும்..
ReplyDelete