மாவீரர் நினைவாக...
வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்
வேதனை நெருப்போ எனைசுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும் இன்றுவரை-உலகில்
ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
எதற்கு இறைவா அழித்துவிடு
படமதைப் பார்த்து அழுதேனே-இனி
பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
இரக்க மின்றி கண்துஞ்சல்
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
வேரொடு தமிழரை அழித்துவிடு
மனித நேயம் போயிற்றே-ஈழம்
மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
கதர உதிர நாளுமென
இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்
ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
செழிக்க வாங்கித் தருவாயா
புலவர் சா இராமாநுசம்
கவிதை வரிகள் அருமை ஐயா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஈழம் செழிக்கும்..செழிக்கவேண்டும்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteமிக அருமையான கவிதை வரிகள்.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅருமை வரிகள் ஐயா...
ReplyDeletetm2
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteவரிகளின் கோர்வை மிக அருமை ஐயா
ReplyDeleteவரிகளில் வாழும் செழிப்பு நிச்சயம் அவர்கள் வாழ்வையும் செழிப்பாக்கும்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅனைத்து தமிழர்களின் விருப்பமும் அதுதான் அய்யா (சிலரை தவிர்த்து)
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Deleteஅருமையான வேண்டுதல்! பலிக்கட்டும்!
ReplyDeleteகவிதை வரிகள் அருமை...
ReplyDeleteமனதை அழுத்துகிறது வரிகள்.வணக்கம் நம் தெய்வங்களுக்கு !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete