இனிய உறவுகளே! மாவீரர்கள் நினைவு வாரமாக இம்மாதம் 21 முதல்27 வரை போற்றப்படுவதை , ஒட்டி முன் நான், ஈழம் பற்றி எழுதிய கவிதைகள் மீள் பதிவாக தினம் ஒன்று வெளிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல
பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்
இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்
இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை
புலவர் சா இராமாநுசம்
வலிகளை மறைக்கவும் மறக்கவும் முயற்சிப்போம்...
ReplyDeleteமீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவதால் வலியே மிஞ்சுகிறது ஐயா..
நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்
கலங்க வைக்கும் வரிகள்..
ReplyDeleteமீள் பதிவு - நன்றி ஐயா...
உங்களின் ஆழ்மனது ஏக்கம்
ReplyDeleteஉரிமையான தமிழரின் தாக்கம்
இனி கிடைத்திடும் இனியசொர்க்கம்-அதுவே
ஈழத்து மக்களின் இன்ப உலகம்
படித்து மனம் நொந்தேன்.
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteகனத்த பொருள் கொண்ட கவிதை..
ReplyDeleteமனதையும் பிசைந்துவிட்டது பெருந்தகையே..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete