எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே
என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்
இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை
புலவர் சா இராமாநுசம்
தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம்
ReplyDeleteதங்களை பார்பதற்கு மகிழ்ச்சி அடைவோம்
மிக்க நன்றி!
Deleteவரிகள் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதமிழனென்றே சொல்லடா
ReplyDeleteதலை நிமிர்ந்து நில்லடா!
பாரதியார்
தமிழனாகப் பிறந்ததும் பெருமை.
உங்களைப் போன்ற தமிழ்க்கவிகளைக்
காண்பதும் எங்களுக்கு பெருமை தான் புலவர் ஐயா.
மிக்க நன்றி!
Deleteசிந்தையில் தித்திக்கும்
ReplyDeleteதிகட்டாமல் தாளமிடும்
எம் தாய்த்தமிழுக்கு
அழகிய கவி படைத்தீர்கள் பெருந்தகையே...
அருமை..
மிக்க நன்றி!
Delete//இன்னல் பலபல எய்திய போதும்
ReplyDeleteஎதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை //
உண்மைதான். கன்னித்தமிழ் என்றுமே கலங்கியதில்லை. கவிதைக்குக்கு வாழ்த்துக்கள் ஐயா!
கன்னித்தமிழ்,கலங்காத தமிழ்
ReplyDeleteஅருமை ஐயா
// எம்மொழி உமது தாய்மொழி யென்றே
ReplyDeleteஎன்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே //
எனது தாய்மொழி தமிழ் என்பதில் நான் பெருமையும் உவகையும் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
Deleteபுலவர் மொழியென்று
ReplyDeleteபலருரைக்கும் நிலையின்று
பாராள்வோர் கைவிட
பாவலர் உம்போன்றோர்
பறையறிவிக்க
பாங்காய் வாழுது
எம் தமிழ்
மிக்க நன்றி!
Deleteசெந்தமிழ் பெருமை படித்ததிலே இன்பத் தேன் வந்து இனித்ததென் நாவினிலே
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇன்னல் பலபல எய்திய போதும்
ReplyDeleteஎதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை//
அழகிய வரிகள்...வாழ்த்துக்கள் ஐயா...
மிக்க நன்றி!
Delete