Tuesday, November 20, 2012

இடர்தனை நீக்கிட எண்ணிப் பாரீர் –ஒன்றாய் இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!




தயக்கமது வலைதன்னில் காணு  கின்றேன் மனத்
   தளர்வுதனை பலரிடமும்  காணு  கின்றேன்!
வியப்பதென்ன!? இதுபற்றி அறிவீர் நீரே இந்த
   வேதனையைத் தீர்திடவும் முயல்வீர் நீரே!

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் இனியும்
    ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்
பொறுமைக்கும் அளவுண்டாம் எண்ணிப் பாரீர் துயர்
    போக்கிட ஒன்றென திரண்டு  வாரீர்

மூத்தாரா இளையாரா பேதம்  வேண்டாம் தன்
     முனைப்பிங்கே அணுவளவும் அறவே வேண்டாம்
காத்திட  வேண்டாமா நமது உரிமை இதைக்
    கண்ணென எண்ணுதல் ஆமே! பெருமை

அழுதாலும் தவறென்று  சொல்லி நம்மை  -இனியும்
   அடக்கிட அதிகாரம் முயலும் உண்மை!
எழுவீரா தொழுவீரா  எண்ணிப் பாரீர் நம்மின்
   எதிர்கால நிலையெண்ணி திரண்டு  வாரீர்!

சிதறிய தேங்காயாய் இருத்தல் நன்றோ உடன்
   சிந்தித்து செயல்பட வேண்டும் இன்றோ!?
பதறியே எழுந்திட வேண்டும்1 அன்றோ!-மேலும்
   பார்ப்பதா வேடிக்கை நாளும் நன்றோ!

தொடர்கதை ஆகுமுன்  முடிவெ டுப்பீர் எனில்
    தூண்டிலில் மீனெனத் துடிது டிப்பீர்!
இடர்தனை  நீக்கிட எண்ணிப் பாரீர் ஒன்றாய்
    இணைந்திட அணியெனத் திரண்டு வாரிர்!

                      புலவர் சா இராமாநுசம்
 




7 comments:

  1. தொடர்கதை ஆகும் முன் முடிவெடிப்போம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. ஆம். உங்களின். மதுவின் கருத்தே எம் கருத்தும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. விரைவில் ஒன்றுபடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  4. இணைந்து செயல்படுவோம்...
    பேதங்கள் வேண்டாம்...
    வீணான பேதங்களை
    முளையிலேயே கிள்ளி எறிவோம்...

    ReplyDelete