Wednesday, November 14, 2012

மூத்த பதிவரே வாருங்கள் –உடன் முறையாய் அழைப்பினைத் தாருங்கள்




நிம்மதி வலைதனில் போயிற்றே சில
  நிகழ்வால் இந்நிலை ஆயிற்றே !
நம்மதி கொண்டு வொல்வோமா இதில்
   நமக்கென என்றே சொல்வோமா ?

ஒன்றுப் பட்டும் செய்வோமா நம்
    உரிமையைக் காத்து  உய்வோமா!
என்றும் தானே தூண்டுகிறேன் நல்
    இளைஞர் தம்மை வேண்டுகிறேன்!

வெள்ளம் வருமுன் அணைபோட நான்
    வேண்டும் என்றேன் எனைசாட
உள்ளம் கொண்டார் சிலபேரே ஆனால்
     உணர்ந்தார் இன்று பலபேரே!

குற்றம் யாரையும் சொல்லவில்லை வரும்
    கொடுமைக்கே வைப்போம் ஓரெல்லை!
கற்றவர் நாமென காணட்டும் அரசு
   கருத்தினில் மாற்றம் பூணட்டும்!

ஆட்டைக் கடித்த நிலையன்றே இது
    அடிமை யாக்கும் நிலையொன்றே!
கேட்டை நீக்க சிந்திப்போம் நாள்
    குறித்து  பதிவரே சந்திப்போம்!

மூத்த பதிவரே வாருங்கள் உடன்
    முறையாய் அழைப்பினைத் தாருங்கள்
காத்திட  இதுதான் இன்றுவழி எனில்
   காண்போம் என்றும் தீராப்பழி!

             புலவர் சா இராமாநுசம்


28 comments:

  1. விரைவில் அனைவரும் ஒன்றுபட்டு சந்திப்போம்... சிந்திப்போம்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //உரிமையைக் காத்து உய்வோமா!//
    நல்ல கருத்து. ஆனால் காப்பாற்ற யாரும் வரப் போவதில்லை.
    அச்சமா .. தெரியவில்லை!


    வொல்வோமா ... ?

    ஒன்றுப் பட்டும் ...?

    ReplyDelete
  4. உறுதியாகச் சந்திப்போம்
    இது குறித்துச் சிந்திப்போம்

    ReplyDelete
  5. இதுபற்றிப் பேசிட, ஒருங்கிணைந்திட மற்றுமொரு பதிவர் சந்திப்பு அவசியம் தேவை என்றே எனக்குத் தோன்றுகிறது ஐயா. ஒன்றுபடுவோம்.

    ReplyDelete
  6. இணைவோம் ஐயா..

    ReplyDelete
  7. பதிவர் பாதுகாப்பை
    பகன்றீர் அன்றே
    சரிவர ஏற்காது
    சறுக்கியது கூட்டம்

    இருப்பினும் நீவீர்
    இணைவோம் வாரீர்
    அமைப்பாய் திரண்டிட
    அவசியம் என்றீர்

    ஆம்
    இனியொரு விதி செய்வோம்
    இணைய சுதந்திரம் காப்போம்

    ReplyDelete
  8. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

    ReplyDelete
  9. ஆம்! ஒன்று பட்டு சாதிப்போம்!

    ReplyDelete
  10. ஒன்றுபட்டு சந்திப்போம்...சிந்திப்போம்...சாதிப்போம்...

    ReplyDelete
  11. செய்வோம்..வெல்வோம்!

    ReplyDelete
  12. மனிதச் சங்கிலி வலையாகப் பிணைந்துள்ளது புலவர் ஐயா!!

    ReplyDelete
  13. மனக் கலக்கம் வேண்டாம் ஐயா ...

    நிச்சயம் ஒன்றுபடுவோம்...
    அதற்கான வழிவகை செய்வோம்...

    ReplyDelete
  14. ஒன்றுபடுவோம்.போராடுவோம். வெற்றிபெறுவோம்.

    ReplyDelete
  15. மிக்க நன்றி!

    ReplyDelete