நீலம் புயலும் வந்தாயே –மக்கள்
நிம்மதி இழக்கத்
தந்தாயே!
காலன் வருவதாய் ஆயிற்றே-பெரும்
காற்றொடு மழைவர
போயிற்றே!
ஆலம் விழுதொடு ஆடியதே –கடல்
அலைகள் ஊருக்குள்
ஓடியதே!
சீலம் ஆல்ல உன்செயலே – ஏன்
செய்தாய் இப்படி
வன்புயலே!?
வாழைகள் முறிந்து வீழ்ந்தனவே –உழவர்
வயிரும் பற்றி
எரிந்தனவே!
ஏழைகள் குடிசைகள் அழிந்தனவே-அவர்
இருவிழி
நீரைப் பொழிந்தனவே!
பேழையுள் பாம்பென முடங்கினரே-ஏதும்
பேசவும்
வழியின்றி அடங்கினரே!
கோழைகள் அவராம் என்செய்வார்-உதவி
கொடுத்தால்
தானே! இனிஉய்வார்!
விளைந்த நெல்லும் மூழ்கியது –நாற்றும்
வேரெடு எங்கும்
அழுகியது!
வளைந்த கதிர்நெல் கொட்டியதாம்-இனி
வாழ்வே
உழவர்க்கு எட்டியதாம்!
தளர்ந்தவன் கைகள் மடங்கிவிடின்-உலகம்
தாங்குமா
பசிபிணி ஓங்கிவிடின்!
களைந்திட வேண்டும் அரசிதனை –உடன்
கடமையாய் எண்ணி
அரசதனை!
புலவர் சா
இராமாநுசம்
ஒவ்வொரு முறையும் இது போன்ற புயல் வரும்போது இழப்பவை ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் எத்தனை எத்தனை கஷ்டம்....
ReplyDeleteபாடல் மூலம் ஏழைகள் குரல் ஒலிக்கிறது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஇதுதான் இயற்கையின் வரவுசெலவுக் கணக்கு போலும்..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteகளைந்திட வேண்டும் அரசிதனை –உடன்
ReplyDeleteகடமையாய் எண்ணி அரசதனை!
உண்மை ஐயா!அரசின் கருணை பாதித்த அனைவருக்கும் வேண்டும்
புயலின் சீற்றம் கவிதையில் அதிகமாவே இருக்கு,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteசேதத்தை வரிகள் உணர்த்துகின்றன ஐயா.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமோகன் நேரடி ரிப்போர்ட் போல...உங்களது சுடச் சுட கவிதை...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஇயற்கை இடித்துரைத்து பாடம் புகட்டும் போது
ReplyDeleteபுரிகிறது அதன் அருமையும் , பெருமையும் !
வலியும் , வேதனையும் !
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteவரிகளில் வலி தெரிகிறது ஐயா...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபுயல் விளைவிக்கும் பாதிப்பை உங்களின் வரிகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன ஐயா. அரசு உடன் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம். எதிர்பார்ப்பில்தானே வாழ்க்கை ஓடுகிறது!
ReplyDeleteஒவ்வொரு வரியும் மிக வலியுடன் எழுதி இருக்கிறிர்கள்......இந்த வலி கண்டிப்பா நம் அரசுக்கும் இருந்தா கண்டிப்பா உதவி செய்வார்கள்......நம்புவோம்...!
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநீலம் புயலின் தாக்கத்தை நெஞ்சுருகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபாடலின் வாயிலாக தாக்கத்தை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் ஐயா..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபுயலின் தாக்கம் வரிகளில் அதிகமாகவே தெரிகிறதுகவிதை வரிகள் ஒவ்வொன்றும் .புயலின் தாக்கத்தை .தெளிவாக கூறுகிறது .
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteநீலம் செய்த கோலம்! புலவரின் கவிதையாய் வந்துவிட்டது.
ReplyDeleteஇயர்கையின் சீற்றத்தைக் கவிதைஅழகாகச் சொல்லி நிற்கிறது.
ReplyDelete//பேழையுள் பாம்பென முடங்கினரே-ஏதும்
ReplyDeleteபேசவும் வழியின்றி அடங்கினரே!// ஆழ்மனதை தட்டிய வரிகள் ஐயா.. அருமை...
நீலப்புயலின் தாக்கத்தை அப்படியே கூறுகிறது பாட்டு. மிக நன்று அய்யா!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteவரிகளில் வலி தெரிகிறது ஐயா...
ReplyDeleteஇயற்கையின் விளையாட்டை இடித்துரைத்தீர்
ReplyDelete