Tuesday, October 9, 2012

பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப் பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?




ஒருநாள் வேலை நிறுத்தமே-நாம்
   உடனடி செய்வது பொறுத்தமே!
இதுநாள் வீணே போயிற்றே-தமிழ்
   இனமே விரைந்து செயலாற்றே!
வெறிநாய் கன்னடர் உணரட்டும்-படை
   வீரர்கள் அணியென திரளட்டும்!
வருநாள் உலகம் அறியட்டும்-இறுதி
    வாழ்வா சாவா? தெரியட்டும்!

கூடங் குளமாய் ஆகட்டும்-மக்கள்
   கொதித்து ஊர்வலம் போகட்டும்!
பாடம் அவர்களும் கற்கட்டும்-அதைப்
   பார்த்தே வடபுலம் மிரளட்டும்!
வேடம் கலைந்திட சிலரிங்கே-தலை
  வெட்கிக் குனிய வருமிங்கே
நாடகம் முடியும் அப்போதே-இதை
   நடத்துவோம்! உண்மை! தப்பாதே!

இனவழி அனைவரும் ஒன்றாக-நாம்
    இணைந்தால் போதும் நன்றாக!
மனவழி கட்சிகள் மறையட்டும்!-தமிழ்
   மரபைக் காத்திட பறைகொட்டும்
சினவழி முடிவு எடுக்காமல்-நன்கு
    சிந்தித்து எதையும் கெடுக்காமல்
அனைவ ஒன்றென செய்வீரே-பெரும்
    அறப்போர்! நடத்திடின் உய்விரே!

வணிகர் மாணவர் தொழிலாளி-உணவு
   வழங்கும் உழவர்! இன்னபிறர்
அணியென பெண்ணினம் எழுமானால்-உலக
    அரங்கில் அக்குரல் விழுமானால்
பணிந்திடும் மத்தியும் அப்போதே-நாள்
   பார்ப்பதா..?புறப்படும்! இப்போதே
பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
    பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!?

                                    புலவர் சா இராமாநுசம்




28 comments:

  1. அருமை ஐயா!
    என்னுடய வலைப்பக்கத்தில் சில கவிதைகள் பகிர்ந்துள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  2. எழுச்சியூட்டும் உணர்வுக் கவிதை!
    அருமை!

    ReplyDelete
  3. கன்னடர்களுக்கு இருக்கும் ஒற்றுமை இந்த விசயத்தில் தமிழர்களுக்கு இல்லையென்றே தோன்றுகிறது ஐயா..கவிதை சிறப்பு ஐயா..

    ReplyDelete
  4. தேசப் பற்று தங்கள் கவிதையில் அத்தனை வலுப்பெற்று
    இருப்பதைக் கண்டு உள்ளம் குளிருதையா !...தங்களைப்
    போன்றவர்கள் மண்ணில் பிறப்பதற்கு அந்த மண்ணும்
    புண்ணியம் செய்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது .
    மிக்க நன்றி ஐயா அருமையான கவிதைப் பகிர்வுக்கு

    ReplyDelete
  5. நதிகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும்;எந்த மாநிலமும் முழு உரிமை கோரக்கூடாது!

    ReplyDelete
  6. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்தாலொழிய நற்பயன் உண்டாவதில்லை உணர்த்திய அருமையான வரிகள் ஐயா .

    ReplyDelete
  7. தமிழர்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்பட வேண்டும் ஐயா. அதற்காய் குரல் கொடுத்த தங்களின் பா அருமை.

    ReplyDelete
  8. பிணியிது! மருந்திது! செயல்படுவீர்!-தஞ்சைப்
    பெருநிலம் அழியவா வழிவிடுவீர்!? /////

    அருமையன விழிப்புணர்வுக் கவிதை ஐயா!

    ReplyDelete
  9. ஒற்றுமையை உணர்த்தும் வரிகள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  10. ஒன்றுபடுவோம்... அய்யா,,

    ReplyDelete
  11. ஒற்றுமை நம்மில் வளர வேண்டும்...அய்யா.

    அதற்க்கான உங்கள் குரல் அருமை...

    ReplyDelete
  12. நீதிமன்றமே கன்னடரின் போராட்டத்தை கண்டித்துள்ளதே! அதுவே அவர்களின் முதல் தோல்வி! நாமும் கிளர்ந்தெழத்தான் வேண்டும். உணர்ச்சிக் கவி அய்யா! தங்களின் எண்ணன் நிறைவேறட்டும்!

    ReplyDelete
  13. காவிரி உடனே வரவேண்டும்-எம்
    கழனிகள் ஈரம் பெறவேண்டும்
    தாவியே வந்தெம் தஞ்சைதனை-ஒரு
    தாயெனத் தழுவிடும் நிலைவேண்டும்
    ஆவியொன்றில்லா மேனியென- வயல்
    அசைவுகளின்றிக் கிடக்கையிலே
    பாவியர் சூதினைப் பகர்ந்தீரே-மிகப்
    பரிதவித்தே கவி புகன்றீரே!

    ReplyDelete
    Replies
    1. அருமைக் கவியில் ஐயாவே
      அளித்தீர் பதிலும் மெய்யாவே
      எருமை குணமே இங்கேதான்
      இருப்பின் வெற்றி எங்கேதான்
      உரிமை உள்ளதும் போயிடுமே
      உண்மை அதுவென ஆகிடுமே
      சிறுமை குணத்தை விடுவராம்
      சேர்வீர்!அன்றெனில் கெடுவாராம்!

      Delete
  14. சிறப்பான கவிதையொன்று ஐயா

    ReplyDelete