ஊற்றாகிப்
போயிற்றே ஊழல்தான் ஆயிற்றே
காற்றாக
எங்கெங்கும் காண்கிறதே –
மாற்றாக
ஏதும்
வழியின்றி ஏங்குகின்ற ஏழைக்கே
மோதும்
துயர்தான் துணை
இன்னாரென்
றில்லை! எவரென்றும் பேதமில்லை!
ஒன்னாராம் என்பதில்லை! ஒன்றேதான் –தன்னாலே
வாய்த்த
வழியெல்லாம் வாங்குவதே நோக்கமெனில்
காய்த்த
மரத்திற்கே கல்லு
கணகிட்டே காசுதனைக் கையூட்டாய் கேட்டே
சுணக்கமின்றி
செய்வதாக சொல்லி –குணக்குன்றாய்
கூசாது
வேடமிட்டே கூறுகின்றார் அந்தந்தோ
பாசாங்கே
செய்வதவர் பண்பு
அஞ்சாமல்
தேர்தலிலே அள்ளியள்ளி செல்வத்தை
பஞ்சாக
விட்டாரே பார்தோமே –நெஞ்சார
எண்ணிப்பார்ப்
பீரா எவர்மீதே தப்பென்றே
உண்ணினால் வந்திடுமே உண்மை
நோட்டுக்கே வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
நாட்டுக்கே வந்தாரே நாடாள !–கேட்டுக்கே
ஏற்ற வழிதன்னை ஏற்படுத்தித் தந்தோமே
மாற்றம்
வருமா மதி
எந்தத்
துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
வந்த
நிலையுண்டா?வாய்ப்புண்டா! –தந்தவரே
ஓங்கி
ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான்
இங்கே பகை
புலவர் சா இராமாநுசம்
ஒழிக்க முடியா வியாதியாய் விளங்கும் ஊழலைப் பற்றிய வெண்பாக்கள் அனைத்தும் நண்பாக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
Deleteநன்பாக்களுக்கு மூன்று சுழி ண் என்று விழுந்துவிட்டது.மன்னிக்கவும்.கூகிள் transiteration திருவிளையாடல் இது.
ReplyDeleteநமக்குக் கூட மாதத்தில்
ReplyDeleteபுதிதாக ஒரு ஊழல் குறித்து தகவல் ஏதும் இல்லையெனில்
சங்கடமாகத்தான் உள்ளது
விழிப்புணர்வுக்குப் பதில் எதிர்பார்ப்புணர்வை
ஏற்படுத்தியுள்ள அரசியல் திமிலங்களை
என்னதான் செய்வது ?
மிக்க நன்றி!
Deleteவணக்கம் அய்யா ...
ReplyDeleteஇளைய தலைமுறையினர் வந்தால் விலகும் என்றால் வருபவர்களும் படித்துவிட்டு தேர்ந்த ஊழல் வாதிகளாக வருகின்றனர், என்று முடியும் இந்த அவலம் என்றே தெரியவில்லை ..
மிக்க நன்றி!
Deleteஎந்தத் துறைதன்னில் இன்றில்லை ஊழலென்றே
ReplyDeleteவந்த நிலையுண்டா?வாய்ப்புண்டா! –தந்தவரே
ஓங்கி ஒலிக்கின்றார் ஊழல் ஒழிகயெனும்
பாங்கேதான் இங்கே பகை
உண்மை தான் ஐயா எந்தத் துறையிலும் முதலிடம் ஊழலுக்கு உண்டு.
மிக்க நன்றி!
Deleteமிக்க நன்றி!
Deleteஎந்த நிலையிலும் கொடுக்க மாட்டேன் என்று அனைவரும் திடமாய் நின்றால் இதை ஒழித்து விட முடியும். அந்த எண்ணத்தை விதைப்பதும் ஒற்றுமையை வளர்ப்பதும்தான் சுலப சாத்தியமாக இல்லை ஐயா.
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா,
ReplyDeleteஊழலில் உஞ்சலாடும் அரசியல்வாதிகள் திருந்தும்வரை மாற்ற முடியாது
மிக்க நன்றி!
Deleteஎன்ன செய்வது...? மாறினால் நல்லது... இல்லையெனில் ஒன்றுபட்டு மாற்ற வேண்டும்...
ReplyDeleteநன்றி ஐயா...
tm8
தங்களின் ஆதங்கத்தில் நானும் பங்குகொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteeppathaan maarumo....intha corruption.....:-((((
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதங்களின் ஆதங்கம் புரிகிறது. ஒரு புதிய புரச்சிக்கா காத்திருபோம். நிச்சியம் ஒரு நாள் இது மாறும்
ReplyDeleteஊழல் எங்கும் ஊழல்! இந்த நிலை என்றும் மாறும் என்ற ஆதங்கம் கவிதையில் வெளிப்படுகிறது! விரைவில் மாறும் என்று எதிர்ப்பார்ப்போம்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆதங்கக் கவிதை அழகுத் தமிழில்
ReplyDeleteமனம் கொள்ளை கொண்டது !
கருத்தான வெண்பாக்கள்...
ReplyDeleteநன்றி புலவர் ஐயா.
மிக்க நன்றி!
Deleteகருத்தான வெண்பாக்கள்...
ReplyDeleteநன்றி புலவர் ஐயா.
மிக்க நன்றி!
Deleteஐயா, வெண்பாக்களல்ல; அவலமாய்ச் சூழ்ந்திருக்கும் ஊழலை அழிக்கக் கிளம்பிய வண்பாக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteநோட்டுக்கே வாக்குதனை நோகாமல் கொண்டவரும்
ReplyDeleteநாட்டுக்கே வந்தாரே நாடாள
////////////////////////
ஆஹா...... சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா
மிக்க நன்றி!
Deleteஆதங்க கவிதை அழகு...
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவெண்பாக்கள் மிகவும் அருமை ஐயா ...ஆயினும் மூன்று இடத்தில் தளை தட்டுகிறது. சரி செய்யுங்கள் ஐயா.
ReplyDeleteஒன்/னார் - என்/பதில்/லை = நேரொன்றிய ஆசிரியத்தளை
உண்/ணினால் - அவ/ரா = நிரையொன்றிய ஆசிரியத்தளை
வரு/மா - மா/சு = நேரொன்றிய ஆசிரியத்தளை
தாங்கள் சுட்டிய தவறு திருத்தப்பட்டது!
அன்புக்கு மிக்க நன்றி!
நீராகி நிலமாகி காற்றாகி கனலாகி வெளியாகி எங்கும் நிறைந்த பரம்பொருளான கையூட்டு பற்றிய அழகான யாப்பு ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஊழலை
ReplyDeleteவீட்டுக்கனுப்ப
ஓட்டெடுப்பு நடத்த
அங்கேயும்
ஊழல் ஜெயித்தது
மிக்க நன்றி!
Deleteஊழலின் கொடுமைகளை எடுத்தியம்பும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஊழல் கவிதை அருமை ஐயா
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete