Monday, October 22, 2012

இருப்பது எத்தனை நாளே! –அதனை இயம்பிட இயலா! வாளே




முகமது அறியா நிலையில் வாழ்த்து
    மொழிந்திட எனது வலையில்
அகமது கொண்டே வந்தார் என்
   அகமிக மகிழத் தந்தார்!
இகபர இன்பம் பெற்றே நாளும்
    இன்றுபோல் என்றும் உற்றே!
செகமதில் வாழ்க நன்றும் அவர்
    சிறப்புற்று வாழ்க! என்றும்

பிறந்தநாள் இருந்த சுற்றம் விட்டுப்
    பிரிந்திட என்னை! மற்றும்
மறந்திட இயலா உறவே நாளும்
    மறுமொழி வழியாய் வரவே
சிறந்தநல் வாழ்வே பெற்றேன் தூய
    செந்தமிழ்  தன்னைக் கற்றேன்!
திறந்தநல் மனமே  கொண்டேன் வந்த
     தீமைகள் ஓடக் கண்டேன்!

தென்னையாய் வாழ வேண்டும் வாழ்வே
     தெளிந்தநல் நீராய் யாண்டும்!
பொன்னெனப் போற்றப் பலரும் எழில்
     பொங்கிடப் பூத்த  மலரும்
கன்னலின்  சுவையே போன்றும் முக்
    கனிதரும் இனிமை யான்றும்
என்னையே மாற்றிக் கொள்வேன்! நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!

இருப்பது எத்தனை  நாளே! அதனை
    இயம்பிட இயலா! வாளே
அறுப்பது நமது உயிரே என
    ஐயனும்  மொழிந்த  உரையே!
பொறுப்பது கொண்டே எதிலும் சற்று
   புன்னகை பூக்க பதிலும்
வெறுப்பது இன்றி சொல்வீர்-செய்யும்
   வினையெலாம் நீரே வெல்வீர்!

                    புலவர் சா இராமாநுசம்
   


21 comments:

  1. தென்னையாய் வாழ வேண்டும் –வாழ்வே
    தெளிந்தநல் நீராய் யாண்டும்! -அருமையான வரிகள். ரசித்துப் படித்தேன் கவிதையை. நன்று ஐயா.

    ReplyDelete
  2. அருமையான வரிகளால் எம்மை ஆட்கொள்ளும் தங்கள்
    புலமைக்கு வயது சொல்ல இயலாது !.....வாழ்த்துக்கள்
    ஐயா வாழ்வாங்கு வாழ வையகம் உள்ளவரை தங்கள்
    கவிதைக் குழந்தைகள் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  3. //என்னையே மாற்றிக் கொள்வேன்!//
    மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை ஐயா. தாங்களே விரும்பியவாறு தான் இருக்கிறீர்கள். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  4. நீடுழி வாழ வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete

  5. பிறந்தவர் எல்லாம் ஓர்நாள்
    போவதே என்ப(து) இயற்கை!
    துறந்தவர், பிறர்க்கு வாழ்ந்தோர்,
    துயரினைத் துளியும் செய்யோர்,
    சிறந்தவர், சொல்லும் வாக்கால்
    சீர்பெறும் உலகைக் செய்வோர்,
    இறந்தவர் வாழ்வார் என்றும்!
    இறப்பது உடல்தான் அன்றோ!

    அன்புடன்
    அருணா செல்வம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  6. புலவர் ஐயா... உங்கள் கவிதைக்குப் பதிலாய் எழுதினேன். தவறாக பொருள் கொள்ள வேண்டாம்.

    நீங்கள் நீடூடி வாழ வேண்டி வணங்குகிறேன்.

    ReplyDelete
  7. // பொறுப்பது கொண்டே எதிலும் –சற்று
    புன்னகை பூக்க பதிலும்
    வெறுப்பது இன்றி சொல்வீர்-செய்யும்
    வினையெலாம் நீரே வெல்வீர்! //

    தங்கள் வாழ்வியல் சிந்தனைகளை அனைவரும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  8. அருமையா வரிகள் ஐயா
    மீண்டும் வாழ்த்துகிறேன் நலம்பெற்று நலவாய் வாழ

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  9. //தென்னையாய் வாழ வேண்டும் –வாழ்வே
    தெளிந்தநல் நீராய் யாண்டும்!
    பொன்னெனப் போற்றப் பலரும் –எழில்
    பொங்கிடப் பூத்த மலரும்
    கன்னலின் சுவையே போன்றும் –முக்
    கனிதரும் இனிமை யான்றும்
    என்னையே மாற்றிக் கொள்வேன்! –நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!//

    - அருமையான வரிகள் அய்யா! கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  10. Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  11. //தென்னையாய் வாழ வேண்டும்//

    அருமையான கருத்து ஐயா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி!

      Delete
  12. கன்னலின் சுவையே போன்றும் –முக்
    கனிதரும் இனிமை யான்றும்
    என்னையே மாற்றிக் கொள்வேன்! –நான்
    என்றென்றும் நன்றி சொல்வேன்!

    ReplyDelete