எழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-என
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
புலவர் சா இராமாநுசம்
எண்ணியே ஆசிரியர் பணிசெய்ய நன்றே
அழுத்தமாய் பசுமரத் தாணியைப் போன்றே-நீர்
ஆற்றிட வந்தீராம் சேவையாம் இன்றே
செழித்திட உலகது வேண்டுதல் நன்றே-என்
சிரம்தாழக் கரம்கூப்பி செப்புதல் ஒன்றே
அழியாது இயற்கையைக் காப்பீரா மென்றே-வகுப்பு
அறைதனில் மாணவர் முன்னாலே நின்றே
பருவங்கள் மாறிட உலகமே மாறும்-இதை
படிக்கின்ற மணவர் உணரவே கூறும்
வருங்கால உலகமே அன்னாரின் கையில்-அதை
வகுப்பது வகுப்பறை அறிவீரா பொய்யில்
தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்
தமிழ்நாடு கண்டதும் அழியாத காட்சி
திருமிகு இப்பணி செய்திடின் நீரும்-நல்ல
திருப்பணி யாகவே மலர்ந்திடும் பாரும்
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
சுற்றும் சூழலும் கெட்டேதான் போச்சே-தினம்
சுற்றிடும் உலகெங்கும் மாசாக ஆச்சே
கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
காரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
புலவர் சா இராமாநுசம்
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
ReplyDeleteபேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை//
எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டுமாயின்
சூழல் குறித்தும் மாணவர் சமுதாயம் குறித்தும்
நாம் அதிக அக்கறை கொள்ளத்தான் வேண்டும்
என்பதை நேர்த்தியாகச் சொல்லிப்போகும்பதிவு
அருமையிலும் அருமை
பகிர்வுக்கு நன்றி
tha.ma 1
ReplyDeleteஉங்கள் பாணியில் ஆசிரியர் கவிதை அருமை.உங்கள் வேண்டுகோளை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.
ReplyDeleteசிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... நன்றி ஐயா...
ReplyDeleteமெழுகுவர்த்தி போல் வாழும் பல பேருக்கு... எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி
Deleteஅய்யா! எழுத்துருவின் அளவை சற்று அதிகரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.என் கணினியில் மட்டும் சிறியதாகத் தெரிகிறதா? என்பதும் தெரியவில்லை
ReplyDeleteத ம 2
மிக்க நன்றி
Deleteஅருமை.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி
Deleteதங்களுக்கு எங்கள் பணிவான ஆசிரியர் தின வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி
Deleteசுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வை வளரும் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு ஊட்டுதல் ஆசிரியர்தம் பொறுப்பென்றும் அவற்றைப் பேணல் மாணவர்தம் கடனென்றும் அழகாய் உணர்த்திய வரிகள். இயற்கையைப் பேண, இனிய வாழ்வு தானே அமையும் என்று அறிவுறுத்திய கவிதைக்குப் பாராட்டுகளும், ஆசிரியர் தின வாழ்த்துக்களும் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமையான வரிகளுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னையும் வியப்பில் ஆழ்த்தியது !........வாழ்த்துக்கள்
ஐயா உங்களுக்கும் .மனதை கவர்ந்த வரிகள் ....
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே-உலகு
அழிகின்ற காட்சிகள் திரையது சொல்ல
விலையாக அழிப்பதோ நாள்தோறும் தன்னை-மேலும்
விடுவாளா எண்ணுங்கள் இயற்கையாம் அன்னை
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
மிக்க நன்றி
Deleteமிக்க நன்றி
Deleteபுலவர் அய்யா அவர்களுக்கு எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Delete// தருகின்ற அழிவிற்கு ஜப்பானே சாட்சி-முன்னர்// மிக மிக அருமையான வரிகள் அய்யா
ReplyDeleteஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
Deleteபெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
ReplyDeleteபேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே
மற்றெவர் போனாலும் மாணவர் சேவை–உலக
மக்களின் வாழ்வுக்குச் செய்திடும் சேவை
ஆசிரியர் தின வாழ்த்துகள்
மிக்க நன்றி
Deleteஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களுக்கும் தனியாக.
மிக்க நன்றி
Deleteநல்லது ஐயா..!
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கள். அன்புக்கும் நன்றி
மிக்க நன்றி
Deleteஆசிரியர் தினத்தன்று அருமையாக எழுதப்பட்ட அழகுக்கவிதை.நல்வாழ்த்துகக்ள்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅழாகான கவிதை அய்யா, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅன்பு ஐயா.
ReplyDeleteஉங்கள் கவிதை அருமையைக் குறிப்பிட எனக்கு அருகதை இல்லை.
ஆசிரியராக உங்கள் எழுத்தைப் படிக்க எனக்கு எழுத்தறிவூட்டிய
என் தமிழ் ஆசிரியரையும் உங்களையும் வணங்குகிறேன்.
மிக்க நன்றி
Deleteவணக்கம் அய்யா
ReplyDeleteபதிவுலகில் தமிழ் வளர்க்கும் ஆசானே வாழ்த்துங்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
நன்றி!!
மிக்க நன்றி
Deleteஇன்று தேவையான வேண்டுகோளுடன் அருமையான கவிதை.
ReplyDeleteவணங்குகிறேன் புலவர் ஐயா.
மிக்க நன்றி
Deleteஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவழமையான வேண்டுகோள் அல்ல
ReplyDeleteவாழ்வதற்கான வழி -ஆம்
சுற்றுசூழல் பேணுதல்
இனியதை வேண்டும்
இந்நாளில்
தங்களின் ஆசி வேண்டும்
உங்கள் வரிகளை அழகு என்று சொல்லிச் செல்ல எனக்கு தகுதியில்லை என நினைக்கிறேன் ...
ReplyDeleteஉங்கள் வரிகள் ஒவ்வொன்றும் வாக்கியங்களின் பிறப்புக்கள் போல் எனக்குத் தோன்றுகிறது...
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா
//கற்றும் பாடமே தெளியவே இல்லை-என்ன
ReplyDeleteகாரணம் யாருக்கும் புரியவே இல்லை
பெற்றவள் இயற்கையாம் அன்னையைக் காத்தே-நாம்-
பேணுவோம் உலகென்னும் நம்பெரும் சொத்தே//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி
Deleteநல்ல நாளில், நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள்..
ReplyDeleteநல்லது....
பலவாறு பருவங்கள் மாறிட யிங்கே-தினம்
பார்கின்றோம் யார்செய்த தவறுதான் எங்கே
நிலமகள் நடுங்கியே குலுங்கிட அந்தோ-தம்
நெடும்வாயே திறந்துயிர் விழுங்கிட தந்தோம்
அலையாக பேராழி புகுந்திட உள்ளே
மிக்க நன்றி
Delete