Wednesday, September 26, 2012

போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை




போதும் என்ற மனமில்லை-நல்
   பொறுமை என்ற குணமில்லை
வாதே செய்தும் வாழ்வார்கள்-வீண்
   வம்பு செய்தே வீழ்வார்கள்
ஏதம் ஒன்றேத் தொழிலாக-சிலரை
    ஏய்துப் பிழைப்பதும் அதுவாக
பேதம் அற்றே எங்கெங்கும்-வாழ்வில்
   பிண்ணி கிடப்பதும் முறைதானா ?

முற்றும் துறந்தார் துறவியென-எதையும்
   முழுதும் உணர்ந்தார் ஞானியென
கற்றோம் நாமும் ஏட்டினிலே-ஆனாப்
    காணோம் இன்றே நாட்டினிலே
பெற்றோர் பிள்ளை தம்மிடையே-பணம்
    பெசிட இன்றும் நம்மிடையே
பற்றோ பாசமோ இல்லாமே விட்டுப்
    பறந்திடப் பாரீர் சொல்லாமே

குற்றம் எதுவெனத் தெரியவில்லை நாளும்
    குறைகளே வளர்வதும் புரியவில்லை
அற்றார் அழிபசி தீரவில்லை நாட்டை
   ஆள்வோர் போக்கும் மாறவில்லை
சுற்றுச் சூழலும் மாசாக வாய்ச்
   சொல்லும் செயலும் வேறாக
சுற்றம் தாழா நிலைபெற்றோம் வெறும்
   சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்

                           புலவர் சா இராமாநுசம்

   

12 comments :

  1. மிக சரியாக இன்றைய காலப் பொழுதில் மனிதர்கள்
    எவ்வாறு வாழ்கின்றனர் என்பதை இயம்பியுள்ளீர்கள் .
    காலம் இது வெறும் கலிகாலம் என உணர்த்தும் வாழ்க்கை முறை கண்டு மனம் வெதும்பத்தான் செய்கிறது ஐயா .:( மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. பொன்மொழிகள் மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  3. பல மனிதர்களின் இன்றைய உண்மையான நிலை...

    ReplyDelete
  4. //வெறும்
    சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்//

    சரியாய் சொன்னீர்கள் ஐயா. கருத்துள்ள கவிதை தந்த தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. இன்றைய நவநாகரீக மனிதனின் ஏத்தேச்சிய நிலையை கவிதையாய் வடித்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  6. இன்றைய வாழ்க்கை நிலையைப் பதிவு செய்துள்ளீர்கள் அருமையான வரிகளில்.

    ReplyDelete
  7. நிஜத்தைச் சொல்கின்றது கவிதை. அருமை.

    ReplyDelete
  8. உண்மையான சொற்கள்!அருமை

    ReplyDelete
  9. சுற்றம் தாழா நிலைபெற்றோம் – வெறும்
    சுயநலம் ஒன்றே நாம்கற்றோம்“

    உண்மையிலும் உண்மை புலவர் ஐயா.

    ReplyDelete
  10. ஆழமான பொருள் நிறைந்த கவிதை ஐயா!

    ReplyDelete
  11. பாசம் விட்டு பணம் மட்டுமே குறிவைத்த சுயநல வாழ்வாகிறது ஐயா இப்போதெல்லாம்.மனம் விட்டுப்போகிறது வாழ்வில் !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...