Wednesday, September 19, 2012

இன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை தருவோமா?



அச்சமின்றி வருகிறான்  அளவளாவி போகிறான்
இச்சகத்தில் தமிழனே   இளிச்சவாயன் ஆகிறான்
கச்சத்தீவைக் கொடுத்தமே கண்டபலன் என்னவோ
துச்சமாக எண்ணியே தொல்லைநாளும் பன்னவோ!


புத்தமதப் போர்வையில் பொறுக்கிபக்சே வருகிறான்
எத்தனவன் தமிழனுக்கு என்னதுயர் தருகிறான்
சித்தமெல்லாம் நஞ்சுகொண்ட சிங்களவன் வருவதா
பித்தர்களே வரவேற்பும் பேயனுக்குத் தருவதா


போர்குற்ற வாளியவன் புத்தமத வாதியா
யார்குற்ற வாளியிதில்? வடபுலத்து நீதியா
பார்தூற்றும் ஒருவனுக்கு பா.ஜ .க வும் வரவேற்பா
ஊர்தூற்றும்! உலகமே தூற்றுவதும்! ஏற்பா


குண்டுமழை பொழிந்தவனும் எம்மினத்தை அழித்தான்
கண்டுமதைக் காணாத நம்மாலே செழித்தான்
மண்டும்துயர் நீங்கவில்லை! மகேந்தன் வருவதிங்கே
உண்டுண்டு உறங்குவதா உணர்வுகளும் எங்கே?


உயிரொன்றே போயிற்று வீணாக இன்றே
வயிரின்றே எரிகிறது அணைவதுதான் என்றே
துயரொன்றே தமிழனுக்கு மாறாத சொத்தா
பயனின்றே! பாரதமே ஏகமெனப் பார்த்தா


ஒன்றுபட்ட தமிழகத்தைக் காணும்நிலை இல்லையே
நன்றிகெட்ட கயவர்களால் வந்ததிந்த தொல்லையே
வென்றுவிட்டேன் எனச்சொல்லி வீணனவன் வருவதோ
இன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை  தருவோமா?

                             புலவர் சா இராமாநுசம்


                                                    





23 comments:

  1. உணர்வுகளை மீட்டிவிடும் நல்ல கவிதை..

    >>>இச்சகத்தில் தமிழனே இளிச்சவாயன் ஆகிறான்<<<

    உண்மை உண்மை!

    ReplyDelete
  2. அருமையான கவிதை.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. தெளிவூட்டும் தன்மான உணர்வூட்டும்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒன்றுபட்ட தமிழகத்தைக் காணும்நிலை இல்லையே
    நன்றிகெட்ட கயவர்களால் வந்ததிந்த தொல்லையே
    வென்றுவிட்டேன் எனச்சொல்லி வீணனவன் வருவதோ
    இன்றுவிட்டால் போதுமென ஓடும்நிலை தருவோமா?


    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. மிக அருமை..

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  6. தக்க சமயத்தில், ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்திய புலவரை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

    ReplyDelete
  7. ஆரம்ப வரிகளைப் படிக்கும் போது அச்சமில்லை அச்சமில்லை...இந்திரா பட பாடல்கள் ஞாபகத்துக்கு வந்தது..
    உணர்சி மிகுந்த கவிதை ஐயா
    த, ம. 4

    ReplyDelete
  8. நன்றிகெட்ட கயவர்களால் வந்ததிந்த தொல்லையே..

    உண்மைதான் புலவரே..

    நீண்ட நாட்களாகிவிட்டது..

    பணிச்சுமை காரணமாக முன்பைப் போல வலையில் உலவமுடிவதில்லை..

    பதிவர் சந்திப்பு உட்பட தங்களின் இடைவிடாத பங்களிப்பை அவ்வப்போது காண்பதுண்டு புலவரே மறுமொழியிடமுடிவதில்லை அவ்வளவுதான்..

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

    ReplyDelete
  9. ஆதங்கத்துடன் கவிதை வெளிப்பட்டிருக்கிறது ஐயா..

    ReplyDelete
  10. வணக்கம் புலவர் ஐயா...
    நேற்று உங்கள் கருத்துப் பெட்டி வரவேயில்லை.
    நான் பல முறை முயற்சித்தேன்.
    அருமையான கவிதை ஐயா. நன்றி.

    ReplyDelete
  11. நெருப்புக்கவிதை....சுடுகிறது......தகிக்கிறது....

    ReplyDelete
  12. தங்களின் சொற்பெருக்கும், அடர்த்தியும், பொருட்செறிவும்,கட்டுக்கோப்பும் சந்தமும் வியக்கவைக்கின்றன ஐயா,, என்னைப்போன்று யாப்பில் ஊறுபவர்களுக்கு தங்களின் வரிகள் வழிகாட்டி.. தங்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறோம்....வளர்க தங்களின் பணி....

    ReplyDelete
  13. மிக்க நன்றி!

    ReplyDelete
  14. மிக்க நன்றி!

    ReplyDelete