வலையுலக வரலாறு போற்றும் கூட்டம்-சென்னை
வலைப்பதிவு இளைஞர்களின் சாதனை! காட்டும்
அலைவழியே அகம்கண்டே பழகி வந்தார்-இன்று
அன்புமுகம் காண்பதற்கே அலையாய் வந்தார்
இலைநிகரே எனப்பலரும் எடுத்துச் சொல்ல-வர
இயலாரும் இல்லத்தே காண நல்ல
வலையுலக திரட்டியவர் வசதி செய்தார்- அவரை
வாழ்த்துகிறோம் ஒன்றாக, நன்றே செய்தார்
தானாக பொருள்தன்னை நாடி வந்தே-ஏதும்
தன்னலமோ, எதிர்பார்போ இல்லார் தந்தே
தேனாக இனிப்பவராம் மக்கள் சந்தை-பாசத்
தோழரைப் பாராட்டி மகிழ்வோம் சிந்தை!
நானாக இச்செயலை செய்தேன்!.? இல்லை!-என்
நேசமிகு, பாசமிக இளையோர் ஒல்லை
மானாகத் துள்ளியவர் செய்தப் பணியாம்-மேலும்
மட்டற்ற என்நன்றி அவர்கே அணியாம்
(தொடரும்)
புலவர் சா இராமாநுசம்
சிறப்பான கவிதை ஐயா.
ReplyDeleteநேற்று என்னால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தம் எப்போதும் இருக்கும். நேரடி ஒளிபரப்பு காலை பார்த்தேன். மதியத்திலிருந்து அலுவலகம் சென்று விட்டதால் பார்க்க இயலவில்லை.
சந்திப்பினை நிறைவாய் நடத்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
வணக்கம் கலந்த நன்றிகள் ஐயா
ReplyDeleteஉங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDelete'அடையாறு அஜீத்' சென்னை பித்தனை பார்க்க பெருந்திரளாக வந்த ரசிகர்களுக்கு ஆனந்த கண்ணீரை சமர்ப்பிக்கிறேன்.
ReplyDeleteசென்னைப்பதிவர்களின் அன்பும்
ReplyDeleteசுறுசுறுப்பும் எதையும் நேர்த்தியாக
திட்டமிட்டு பதிவர் சந்திப்பை
நடத்திய பாங்கும் ம்னம் தொட்டது
பெரியவர்களின் வழிகாட்டுதலும்
இளைஞர்களின் ஈடுபாடும் இருந்தால் எதையும்
சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பதிவர்
சந்திப்பு நல்ல உதாரணம்
நீங்கள் இதை தங்கள் வாழ் நாள் சாதனையாக
எண்ணி நிச்சயம் மகிழ்வு கொள்ளலாம்
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteஉங்கள் எண்ணத்தால் உயர்ந்தோம் நன்றி அய்யா :-)
ReplyDeleteதங்களின் நீண்ட நாள் எண்ணம் நேற்று நிறைவேறியது ஐயா...
ReplyDeleteஇனி வருடாவருடம் தொடரும்.....
பதிவர் சந்திப்பு திருவிழா வைபோகமாக நடந்ததை நேரில் வந்து பங்கு பெறமுடியவில்லையே என்று இருக்கிறது ஐயா....
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா....
வயது வித்தியாசமின்றி அன்பு மட்டுமே எல்லோரையும் ஒன்றாக இணைத்து மூத்தோரின் வழிநடத்தலில் சிறப்பாக நடந்தேறிய இந்த விழா இனியும் சரித்திரம் படைப்பது போல் வருடத்திற்கொருமுறை நடக்கும் என்ற நம்பிக்கை விதையையும் விதைத்திருக்கிறது... வருடா வருடம் இந்த சிறப்பான வைபவத்தில் கலந்துக்கொள்ள இயலாவிட்டாலும் ஏதேனும் ஒரே ஒரு முறை கலந்துக்கொள்ளவேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்துகிறது...
அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....
ஐய்யாவைச் சந்தித்தஅணக்கம் ஐயா.தில் மிக மகிழ்ச்சி. பெரியோருடன் இருப்பது அவர் பேச்சைக் கேட்பது எல்லாமே மனம் நெகிழ வைக்கும் விஷயம்.
ReplyDeleteதங்கள் கவிதை அத்தனை நடப்புகளையும் குறள் வரிகள் போலப் பரிமளிக்கச் செய்து விட்டன.
வணக்கம் ஐயா.
ஐயாவின் ஆசியுடன் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஐயா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா தங்கள் கனவு மிக
ReplyDeleteசிறப்பாக ஒப்பேறியதை இட்டு நாமும்
மிக மகிழ்கின்றோம் .இந்த சந்திப்பு மேலும்
மேலும் தொடர வாழ்த்துக்கள் .
நல்ல கவிதை ஐயா சுருக்கமாகவும் விளக்கமாகவும் ......................
ReplyDeleteஅழகிய கவிதை ஐயா! உங்களை நேற்று வீடியோவில் பார்த்தேன்! நீங்கள் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வந்து போயின! மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteநேற்று அனைவர் உள்ளத்தால் உணர்ந்த
ReplyDeleteஉணர்வே தங்கள் கவிதை வெளிப்பாடு !
நன்றி !
கவிதை அருமை ஐயா...
ReplyDeleteவருடா வருடம் இன்னும் சிறப்பாக தொடர்வோம்...
(த.ம. 12)
வெற்றிகளுக்கு வாழ்த்துகள் ஐயா ! கவிதை அருமை.
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தமைக்கு மகிழ்ச்சி!
ReplyDeleteஉங்களுடன் கரம் கோர்த்து செயல்பட்டதில் மிகமிக மனநிறைவு எனக்கு- நன்றி ஐயா
ReplyDeletehttp://josephinetalks.blogspot.com/2012/08/blog-post_26.html வாழ்த்துக்கள்!
ReplyDeleteசாதனைக்கும் கரம் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என்றாலும்
ReplyDeleteநேரலையில் ரசித்தேன் அய்யா
நல்லதொரு விதை விதைக்கபட்டு இருக்கு
நாளை அது விருட்சமாய் வளரும் என்பதில் ஐயமில்லை
உங்களைப் போன்ற மூத்த பதிவர்களின் பங்களிப்பு வியப்புக்குரியது அய்யா
சிறப்பான கவிதை., தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteவிழா தங்களுடைய வழிகாட்டுதலின் கீழ், சிறப்பாக நடந்தேறியமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த பதிவர் சந்திப்பிற்கு துவக்கால சிந்தனைகளைத் தூவி செயல்பட்ட உங்களுக்கும் மற்றும் பாலகணேஷ், மதுமதி, சென்னை பித்தன், தென்றல் சசிகலா ஆகியோருக்கும், சிறப்பாகச் செய்த அனைவருக்கும் நன்றி!
ReplyDeleteஅய்யா விழா மிக சிறப்பாக முடிந்ததில் எங்களை விட உங்களுக்கு தான் பெரும் மகிழ்வு என்பதை நான் உங்களின் முகத்தில் கண்டேன் ... உங்களின் அனுபவம் எங்களுக்கு பாடம் ...
ReplyDeleteஉள்ளம் நிறைந்த நன்றிகள் அய்யா
பதிவு விழா சிறப்பாக அமைந்தமைக்கு மகிழ்ச்சி. அய்யா! உங்களின் முயற்சியும் ஊக்கமும் இந்த விழா நடைபெற காரணம். உங்களுடன் இணைந்து இந்த விழா அமைய சிறப்பாக செயல்பட்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்! நல்லதொரு நிகழ்வு.நான் அயல்நாட்டில் பணியில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.இருந்தும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நல்ல நிறைவுடன் இனிதே நிகழ்வு முடிந்தமைக்கு...அனைவருக்கும் பாராட்டுக்கள்!
ReplyDeleteஎன் பதிவில் "வேண்டாம் தூக்கு கயிறு"..
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா ....
ReplyDeleteஉங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteஉழைப்புக்கு மிகுந்த பாராட்டுகள். நிகழ்வின் பெரும்பகுதியை வீட்டிலிருந்தே பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் உங்களுக்கும், உங்களின் இளைஞரணிக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.
ReplyDeleteமது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?
http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html
வாழ்த்துக்கள் ஐயா! சிறப்பான பதிவர் சந்திப்பு சாதனை படைத்தமைக்கு!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
நேரலையில் உங்களை கண்டேன் ஐயா!
ReplyDeleteஅருமையான கவிதை (TM 16)
புலவரைக் கண்டேன்.
ReplyDeleteஆம். தங்களைக் கண்டேன்.
பூத்துக்குலுங்கும் மலர்களென
பொங்கி வரும் ஆழி அலையெனத்
திரண்டு வந்த தமிழ் பதிவர்களை,
தீந்தமிழால், தம் புன்னகையால்
வென்று நின்ற காட்சி கண்டு
வியந்து நின்றேன்.
தென்றலின் கனவின் அணிந்துரையில்
சொல்லி முடித்த வார்த்தைகள் இரண்டே இரண்டு.
" நுழையுங்கள். நுகருங்கள் ! " என
அழகானவை மட்டுமல்ல.
அசத்துபவை.
வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு.
சுப்பு ரத்தினம்.
என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் vangalen
ReplyDeleteநான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
நன்றி
உங்களின் நீண்ட நாள் கனவு
ReplyDeleteநினைவானதைக் குறித்து
உங்களுடன் நானும் மகிழ்கிறேன்.
அழகான நன்றி மடல்...!!
வணங்குகிறேன் புலவர் ஐயா.
அய்யா,
ReplyDeleteஇனிய சந்திப்பு
நன்றி